Chengalpattu

News September 28, 2024

தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

தாம்பரம் – ராமநாதபுரம் (06103) வாரம் மும்முறை (வியாழன், சனி, திங்கள்) இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை அக்.3ஆம் தேதி முதல் அக்.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதேபோல், ராமநாதபுரம் – தாம்பரம் (06104) வாரம் மும்முறை (வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்) இயக்கப்படும் சேவை அக்.04 ஆம் தேதி முதல் நவ.1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News September 28, 2024

பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஒ கைது

image

லத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (50). பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்தார். அதற்கு தண்டரை கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் (48) ரூ.7,000 லஞ்சப் பணத்தை , தன் நண்பரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். நேற்று பழனியிடம் புகழேந்தி பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பழனியை கைது செய்தனர். இது குறித்து விசாரித்து சுதாகரையும் கைது செய்தனர்.

News September 28, 2024

செங்கல்பட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (செப். 28) வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, செங்கல்பட்டில் இன்று கனமழை செய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 28, 2024

கூடுவாஞ்சேரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

image

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை செய்தனர். பின்னர், அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், பத்திர பதிவு செய்ய வந்த 50 பேரின் செல்போனை பறிமுதல் செய்து சிறை வைத்தனர். பின்னர், ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை செய்த பின்னரே பத்திர பதிவு செய்ய வந்தவர்களை வெளியே அனுப்பினர். இதில் 4 லட்சத்து 24 ஆயிரம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

News September 28, 2024

பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

image

தாம்பரம் மாநகராட்சி இன்று (27.09.2024) தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து சேவைத்துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன் குமார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News September 27, 2024

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் (செப்.27) நடைபெற்றது. இதில், பட்டா, மானியம் பெறுதல், காப்பீடு, கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்டவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது. அதன்மீது, உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார் ஆட்சியர் நாராயண சர்மா பங்கேற்றனர்.

News September 27, 2024

ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வாரண்ட்

image

டி.வி.ஹெச் நிறுவனம் பணம் செலுத்திய ஜெய் நாராயணராஜ் என்பவருக்கு ஒப்பந்தப்படி 2019இல் வீடு வழங்கவில்லை. இதனால் செலுத்திய தொகையை வட்டியுடன் கொடுக்கவும், ரூ.2 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவு ரூ.25,000 கொடுக்கவும் ரியல் எஸ்டேட் ஆணையம் 2021இல் உத்தரவிட்டது. உத்தரவுப்படி, அந்நிறுவனம் பணம் வழங்காததால் வருவாய் மீட்பு சட்டப்படி மாவட்ட கலெக்டர் வாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

News September 27, 2024

புதிய தாழ்தள பேருந்துகள் இயக்கம்: எம்.எல்.ஏ தொடங்கினார்

image

நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாநகர பேருந்து சார்பில் புதிய தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாம்பரம் – ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் – மகாபலிபுரம் ஆகிய வழித்தடங்களில் தலா 5 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. இன்று காலை நடந்த இந்த விழாவில், தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு கொடியசைத்து பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.

News September 27, 2024

செங்கல்பட்டு மாவட்ட அரசு ஊழியர்களுக்கு போட்டி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதில், 800க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆவலுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில், வெற்றி பெறுவோர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். நீங்க கலந்து கொண்டீர்களா?

News September 27, 2024

திருப்போரூரில் செக்யூரிட்டி அடித்து கொலை

image

திருப்போரூர், காலவாக்கத்தில் தனியார் பர்னிச்சர் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமர்(41) செக்யூரிட்டியாக பணி செய்து வந்தார். நேற்று, இவரை இரும்பு ராடு மற்றும் பைப்பால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார், விசாரணை நடத்தி 2 செக்யூரிட்டிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்துள்ளதை கண்டு பிடித்தனர்.

error: Content is protected !!