Chengalpattu

News April 25, 2024

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

image

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரைச் சேர்ந்த வரபிரசாதம் (60) என்பவர் அவரது மனைவி விசுவாசம் (50) நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்தார். இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வரபிரசாதம் மீதான குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News April 25, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்தகத்தினையும் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பரணிதரன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

சாலையை சீரமைக்க கோரிக்கை 

image

செய்யூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் இருந்து விளம்பூர் வழியாக கடப்பாக்கத்திற்கு செல்ல 3.8 கி.மீ., நீள தார்ச்சாலை உள்ளது. சித்தாற்காடு,பாளையூர்,தண்ணீர்பந்தல் அமந்தங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடப்பாக்கத்திற்கு சென்றுவர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சிதிலமடைந்து உள்ளதால் அதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 25, 2024

சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை

image

அச்சிறுபாக்கம் ஒன்றியம் நெடுங்கல் ஊராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இப்பகுதியில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளை இந்த சமுதாய நலக்கூடத்தில் நடத்தி வந்தனர்.
தற்போது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய நலக்கூடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 25, 2024

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சிறப்பு

image

பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசுவாமி கோவில். 300 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் சுவரில், கொடை அளித்தவர்கள் பற்றிய விவரம் சிதைந்து காணப்படுகிறது. தாரகாசுரன் என்ற அரக்கனை முருகன் இங்கு வதம் செய்ததாக கூறப்படுகிறது. சிதம்பரசுவாமிகள் இத்திருக்கோயில் முருகர் மீது பாடிய 726 பாடல்கள், ‘திருப்போரூர் சந்நிதி முறை’ எனப் போற்றப்படுகிறது.

News April 24, 2024

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா

image

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல்.23) ஆஜரானார்.  வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி, யாஷிகா ஆனந்தை வரும் மே 3 அன்று ஆஜராக உத்தரவிட்டார்.

News April 24, 2024

சித்திரை மாத தேரோட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 10 நாள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் 7ம் நாள் உற்சவமும் தேர் வீதியுலா இன்று (ஏப்ரல்-23) தொடங்கியது. இந்த தேர் திருவிழாவில் செங்கல்பட்டு மட்டும் இல்லாமல் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

News April 24, 2024

செங்கல்பட்டு : கடும் பனிப்பொழிவு

image

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும், வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

News April 24, 2024

செங்கல்பட்டு: கும்பாபிஷேக விழா

image

வண்டலூர் சிங்கார தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஞான விநாயகர்,  முகாம்பிகை  ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிறகான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்தனர்.

News April 24, 2024

“புதிய அங்கன்வாடி மையம் அமையுமா?”

image

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிமேடு கிராமத்தில், அங்கன்வாடி மையத்தில், 12 குழந்தைகள் படிக்கின்றனர்.
மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் பயனடைந்து வருகின்றனர்.
பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் சேதமடைந்தது. இதை சீரமைத்து புதிய அங்கன்வாடி மையம் திறாக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.