India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அளவில் மிகச்சிறந்த மக்கள் பணியாற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சேவை ரத்னா விருது வழங்கப்பட்டது. இதில் தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நகர மன்ற உறுப்பினர்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் நகராட்சி 13வது வார்டு நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தேவி வரலட்சுமி கோபிநாத்துக்கு சேவை ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பொத்தேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.21) பொத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தைலாவரம் ஜி.எஸ்.டி சாலை, மேற்கு பொத்தேரி, கிழக்கு பொத்தேரி, வல்லாஞ்சேரி, வள்ளலார் நகர், மாடம்பாக்கம் ஒரு பகுதி, குத்தனூர், மாணிக்கபுரம், திருத்தவேளி ஆகிய இடங்களில் இன்று (ஜன.21) 9-3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
மறைமலைநகர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே இறந்த நிலையில், ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு பயணியர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்த நபர் மண்ணிவாக்கம், புவனேஸ்வரி நகரை சேர்ந்த மணிகண்டன்(44) என தெரிய வந்தது. அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரத்தை சேர்ந்த அரோண்ராஜ்(40). இவரது மனைவி சுமதி(38). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு கணவர் இல்லாத நேரத்தில் சுமதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே.நகர், நத்தம், வேதாசலம் நகர், உள்ளிட்ட 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், கான்கிரீட் மற்றும் தார் சாலைகள் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். மழைநீர் வடிகால்வாய், சிறுபாலம் கட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் நகரவாசிகள் முறையிட்டனர். அதன்படி, இந்த பணிகளுக்காக ரூ.43.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கி உள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் (55) நேற்று முன்தினம் காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே பழைய ஜி.எஸ்.டி. சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத பைக் மோதியதில் இவர் காயமடைந்தார். பின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் மறைமலைநகர், ஊரப்பாக்கம், பீர்க்கன்காரணை, ஆதனூர், சிட்லப்பாக்கம், மேற்கு தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 8 பேரிடம் அடுத்தடுத்து நேற்று முன்தினம் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒத்திவிளாகம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவர் அப்பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சிறையில் அடைத்தனர்.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக நாளை (ஜன.20) அதிகாலை 4 மணி முதல் காலை 6:20 வரை தாம்பரம் – காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே 12 பெட்டிகள் கொண்ட சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இன்றும் (ஜன.19) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.