Chengalpattu

News February 17, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (பிப்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 16, 2026

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எழும்பூர் – ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் (22662/61) வரும் பிப். 20-ந்தேதி முதல் ஏப்.6-ம் தேதி வரை, தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News February 16, 2026

செங்கல்பட்டு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்திடமும் (04175-233333), லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 16, 2026

செங்கை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

செங்கல்பட்டு மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 16, 2026

செங்கை: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்

image

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News February 16, 2026

செங்கை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

செங்கல்பட்டு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

செங்கை அருகே 15 பவுன் நகை கொள்ளை

image

திருப்போரூர் அருகே உள்ள சிறுசேரி பழைய மாமல்லபுரம் சாலை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்வதி (68). இவர் நேற்று முன்தினம் வீட்டில் குடும்பத்துடன் இருந்த போது பீரோ திறந்திருந்து பார்த்துள்ளார்.அப்போது 15 பவுன் நகை திருடுப்போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பார்வதி தாழம் பூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

News February 16, 2026

செங்கல்பட்டு: மீனவ மக்களிடையே மோதல்.. போலீஸ் குவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் மீனவ மக்களிடையே நேற்று (பிப்.15) கடும் மோதல் ஏற்பட்டது. கோயில் திருவிழா தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்த மோதலால் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News February 16, 2026

செங்கல்பட்டு: அலறிய நர்ஸ்கள்.. சிக்கிய ஆபாச இளைஞர்

image

சென்னை கொளத்தூரில் செவிலியர்கள் தங்கி இருந்த வீட்டின் குளியலறையில் ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சத்யராஜின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ இருந்தது தெரியவந்தது.

News February 16, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!