Chengalpattu

News January 25, 2025

உங்கள் ஊர் செய்தி வே2நியூஸ் மூலம் சென்றடைய

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க

News January 25, 2025

காதலியை கொலை செய்த கள்ளக்காதலன்

image

மாமல்லபுரம் விடுதியில் தங்கியபோது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்று, மின்விசிறியில் தூக்கில் தொடங்க விட்ட காதலனை போலீசார் கைது செய்தனர். பவுஞ்சூர் அடுத்த தர்மாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு ஜெயராஜ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதியில் தங்கிய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கொலை செய்ததாக தெரிகிறது.

News January 25, 2025

செங்கல்பட்டில் குடியரசு தின விழா ஒத்திகை

image

நாளை நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்நிலையில், அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா ஒத்திகை சார்-ஆட்சியர் நாராயண சர்மா தலைமையில் நடைபெற்றது.

News January 25, 2025

ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிப்பு

image

தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில், தமிழக போதைத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பில், கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் நேற்று (ஜன.24) எரித்து அழிக்கப்பட்டன. சென்னை, கோவை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,400 கிலோ கஞ்சா மற்றும் 75 கிலோ ஹாஷிஷ் ஆயில் ஆகியவை தீயில் போட்டு எரிக்கப்பட்டன.

News January 25, 2025

பொங்கல் பரிசு தொகுப்பு: 77,099 பேர் வாங்கவில்லை

image

வல்லம் ஊராட்சியில் உள்ள நேரு நகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை, கலெக்டர் அருண்ராஜ் கடந்த 9ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்பின், மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் நேற்று முன்தினம் வரை லட்சத்து 58,962 ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் தொகுப்பு வாங்கி சென்றனர். பொங்கல் தொகுப்பு 77,099 பேர் வாங்கவில்லை. இவர்கள், இன்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட வழங்கல் அலுவலகத்தினர் அறிவித்தனர்.

News January 25, 2025

359 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் 359 கிராம ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, நடப்பாண்டிற்கான செயல் திட்டங்கள், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றலாம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

News January 24, 2025

வேலைவாய்ப்பு முகாமில் 46 பேருக்கு ஆணை 

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று தனியார் துறை மூலம் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு ஆட்சியார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வா 46 பேருக்கு உடனடியாக வேலை ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் நாராயண சர்மா, வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

News January 24, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று (ஜன.24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5,000 காலி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளன. இந்த முகாமில் 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வாராய் கலந்து கொள்ளலாம்.

News January 23, 2025

செங்கல்பட்டு: நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (24.01.25) காலை 10.30 மணியளவில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ‘டி’ பிளாக்கில் நடைபெற இருக்கிறது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

செங்கல்பட்டில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன சுமார் 5000 காலி பணியிடங்கள் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. வேலைநாடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க. 

error: Content is protected !!