Chengalpattu

News February 5, 2025

தற்கொலைக்கு முன் உருக்கமாக பதிவிட்ட இளைஞர்

image

திருவள்ளூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (25), நேற்று முன்தினம் (பிப்.3) திருவள்ளூர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்த தமிழ்செல்வன், மொபைல் போனில் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சில், “எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. என்னை மாதிரி யாரும் ஆன்லைன் கேம் ஆடாதீங்க” என உருக்கமாக பதிவிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News February 5, 2025

மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

image

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக, சேக் முகையதீன் பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய சேக் முகையதீன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை, அரசு தலைமை செயலர் முருகானந்தம் கடந்த ஜன.4ஆம் தேதி பிறப்பித்தார். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக சேக் முகையதீன் நேற்று (பிப்.4) பொறுப்பேற்றுக் கொண்டார்.

News February 5, 2025

சென்னை – மஸ்கட் இடையே கூடுதல் விமான சேவை

image

சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டிற்கு கூடுதல் நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு செல்லும் பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றனர். இதனால், பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் 2 நாட்கள் இந்த நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 5, 2025

ரம்மி விளையாடியவர் ரயில் முன்பு பாய்ந்து பலி

image

பூந்தமல்லி, வயலாநல்லூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (25). சுங்குவார்சத்திரத்தில், உறவினர் வீட்டில் தங்கி ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த தமிழ்செல்வன், அதில் ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் (பிப்.3) திருவள்ளூர் – ஏகாட்டூர் இடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News February 4, 2025

மாவட்ட ஆட்சியர் அழைப்பு 

image

செங்கல்பட்டு மாவட்டம், கவனம் சார்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த லத்தூர் ஒன்றியத்தில் அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி புதிதாக உருவாக்கப்பட உள்ளதால் இப்பள்ளியை செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 10.2.2025 அன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 4, 2025

எருமை குறுக்கே ஓடியதால் விபத்து: இருவர் காயம்

image

காஞ்சிபுரம், ஒரகடத்தில் இருந்து தனியார் தொழிற்சாலை பேருந்து, ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலையில் வந்துகொண்டிருந்தது. சேந்தமங்கலம் அருகே சாலையின் குறுக்கே எருமை ஒன்று ஓடியுள்ளது. ஓட்டுநர் திடீர் பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதில் இரு பயணிகள் காயமடைந்தனர். பாலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 4, 2025

கிளாம்பாக்கத்தில் சிறுமி கடத்தல்: போலீசார் விசாரணை

image

கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த 16 வயது வட மாநில சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் கடத்தும்போது சிறுமி அலறல் கேட்டு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் ஆட்டோவை பின் தொடர்ந்தனர். அப்போது, போலீசார் பின்தொடர்வதை அறிந்து கோயம்பேட்டில் அந்த சிறுமியை கடத்தியவர்கள் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 4, 2025

சாலை விபத்துக்களில் 404 பேர் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில், 404 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் நடந்த மொத்தம் 7,454 விபத்துகளில், 2,136 பேர் உயிரிழந்துள்ளனர். 8,353 பேர் காயமடைந்து உள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக பள்ளி, கல்லூரி போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

News February 4, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 358 மனுக்கள் பெறப்பட்டன

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பட்டா முதியோர் உதவித்தொகை ஓய்வூதியம் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகள் தொடர்பான 358 மனுக்கள் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சார் ஆட்சியர் நாராயண சர்மா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!