Ariyalur

News March 20, 2024

அரியலூர்: அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் அறிவிப்பு

image

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சந்திரகாசன் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

News March 20, 2024

அரியலூர் அருகே ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக படிவம் 12 D வழங்குதல் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஆய்வு செய்தார். பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி முதியவருக்கு படிவம் 12 D வழங்கினார். மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விடுபடாமல் படிவம் வழங்கிட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 19, 2024

அரியலூர்: சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய 2 சிறுவர்கள் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பள்ளி முடிந்து திரும்பிய 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, சிறுவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 18 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், மற்றொரு 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

News March 19, 2024

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டிக் கடை, அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டிக் கடை, அடகு கடை, அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை நெறி விதிகளுக்கு மாறாகவோ , சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறினார்

News March 19, 2024

புனித சூசையப்பர் திருவிழா

image

ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன்பேட்டை பங்கு ஆலயத்தில் புனித சூசையப்பர் திருவிழா திருப்பலி பங்குதந்தை, உதவி பங்குதந்தையால் நிறைவேற்றப்பட்டது. இத்திருவிழா திருப்பலியில் அருட்தந்தை புனி சூசையப்பர் பெயர் கொண்ட அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள் கூறினார்கள். பிறகு ஆலயமணி ஓசையோடுயும், மேள, தாள முழக்கங்களுடன் இறைமக்கள் பக்தியோடும் இருகரம் குவிக்க புனித சூசையப்பர் திருகொடியிரக்கப்பட்டது .

News March 19, 2024

நகையால் பிரச்சனை – ஒருவர் கைது

image

அரியலூர், நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணி, ஜெயக்கொடி என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் மணி தன்னுடைய மாமியார் நகையை தர வேண்டும் என ஜெயகொடியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில்  மணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை  தரப்பில் நேற்று(மார்ச்.18) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற பேனருடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தை வலிமை படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக (18.3.2024) விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

News March 18, 2024

அரியலூர்: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகுமாறு இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

அரியலூரில் குறைதீர் கூட்டம் ரத்து!

image

அரியலூரில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.