India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருதூர் கிராமத்தில் வசிக்கும் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நீர்த்தேக்கதொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக போதிய குடிநீர் வழங்கவில்லை. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கப்படும் என் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த சூர்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விஜயராகவனும் அவரது சகோதரர் பரமேஸ்வரன் சூர்யாவை கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸார் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.
அரியலூர் ஜெயங்கொண்டத்திலுள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் முதலாம் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இதன் கோபுரம் 160 அடி உயரம் கொண்டது. கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக அமைத்து இக்கோவிலைக் கட்டினார். தஞ்சை பெருவுடையார் கோவிலை ஒத்த அமைப்புடன் இது கட்டப்படுள்ளது.இக்கோவிலை ஐக்கியநாடுகள் அமைப்பு, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது சிறப்பிற்குரியது
அரியலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும் கோடைகால நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் குடிநீர் கேட்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாகமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடத்தினார். பின்பு அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினை உடனடியாக தீர்க்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 17ஆம் தேதி ஸ்ரீராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாள் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல் அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற சுகாதார சீர்கேடு குறித்த தகவல்களை தாங்களாகவே முன்வந்து https://ihip.mohfw.gov.in/cbs/-!. இணையதளத்தில் தெரிவிக்கலாம். இதன் மூலம் சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ,முருகன் ,விநாயகர் ,கருப்புசாமி உள்ளிட்ட 11 ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. சிவாச்சாரியார்களால் எடுத்து வரப்பட்டு அனைத்து ஆலயங்களில் உள்ள கலசங்களில் புனிநீர் ஊற்றப்பட்டது.!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.அதன்படி இன்று காலை 6.10 மணியில் இருந்து 6.20 மணி வரைக்கும் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்தது!
Sorry, no posts matched your criteria.