India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த புயலானது தற்போது மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உடையார்பாளையத்தை சேர்ந்த சிறுமி சர்வாணிகா இந்தியா சார்பில் ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் நடைபெற்ற மாபெரும் FIDE RATED OPEN சதுரங்க போட்டிகளில் விளையாடினார். இப்போட்டியில் 2049 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றார். மேலும் Under-9,10,11,12 பெண்கள் பிரிவில் இந்தியாவில் முதலிடம் பெற்ற சிறுமி சர்வாணிகாவை அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி பாராட்டி வாழ்த்தினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.30) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்
அரியலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் விதைகள் கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப்படுகிறது. மேலும் நெல் நுண்சத்து, உயிர் உரங்கள், சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா போன்ற உயிரியல் இடுபொருட்களும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கி பயனடையுமாறு ஆட்சியர் கூறினார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.29) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்
சமூக நீதிக்காக பாடுபவர்களை சிறப்பு செய்வதற்காக, தந்தை பெரியார் விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டிற்கான விருதினை பெற சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகளை தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
சமூக நீதிக்காக பாடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024 ஆண்டிற்கான விருதினை பெற சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகளை கொண்டவர்கள் டிச 20ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பர்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிகிழமை) காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மற்றும் நாளை மறுநாள் (நவ.30) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் (நவ.29) நாளை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த குறைதீர் கூட்டத்தில் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளனர். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.