Ariyalur

News May 19, 2024

அரியலூர்: மதுவிற்ற இருவர் கைது

image

உடையார்பாளையம் போலீசார் கீழவெளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது த.கீழவெளியை சேர்ந்த சுப்பிரமணி, கீழநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்த அரசகுமார் ஆகியோர் அப்பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News May 18, 2024

அரியலூர் மழைக்கு வாய்ப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. அரியலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

அரியலூர்: வெயிலில் குளுகுளு பானம்

image

அரியலூர் மாவட்டம் திருமானூரில் கடும் வெயிலை தணிக்க பொதுமக்களுக்கு சமூக ஆர்வலர்களால் நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 33வது நாளாக இன்றும் திருமானூர் பேருந்து நிலையத்தின் அருகே தண்ணீர் பந்தல் அமைத்து வழங்கினர். இவர்களது செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News May 17, 2024

அரியலூர்: மழைக்கு வாய்ப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் அரியலூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

அரியலூர்: ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள்

image

அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு ஐடிஐ -யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மற்றும் ஐடிஐ அலுவலக மையங்கள் மூலம் மாணவர்கள் ஜீன் 07-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News May 17, 2024

அரியலூர் கலெக்டர் விடுத்த எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்டத்தில் கோடை மழை துவங்கியதையடுத்து மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளை பயன்படுத்த கூடாது. கோடை காலத்தில் இடிமின்னலுடன் வரும் மழையின்போது குழந்தைகளை வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. எனவே, கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட பெற்றோர் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டுக்கொண்டுள்ளார்

News May 17, 2024

அரியலூர்: நான்கு மணி நேரத்தில் 40. 6 மில்லி மீட்டர் மழை

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அரியலூரில் 6 மில்லிமீட்டர், திருமானூரில் 8 மில்லி மீட்டர், ஜெயங்கொண்டத்தில் 13 மில்லிமீட்டர், ஆண்டிமடத்தில் 6 மில்லி லிட்டர், சித்த மல்லி நீர்த்தேக்கத்தில் 5.2 மில்லிமீட்டர், செந்துறையில் 2.4 மில்லி மீட்டர், மாவட்டத்தில் மொத்தம் 40.6 மிமீ மழை கடந்த நான்கு மணி நேரத்தில் பெய்துள்ளது.

News May 16, 2024

நான்கு மணி நேரத்தில் 40. 6 மில்லி மீட்டர் மழை

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அரியலூரில் 6 மில்லிமீட்டர், திருமானூரில் 8 மில்லி மீட்டர், ஜெயங்கொண்டத்தில் 13 மில்லிமீட்டர், ஆண்டிமடத்தில் 6 மில்லி லிட்டர், சித்த மல்லி நீர்த்தேக்கத்தில் 5.2 மில்லிமீட்டர், செந்துறையில் 2.4 மில்லி மீட்டர், மாவட்டத்தில் மொத்தம் 40.6 மிமீ மழை கடந்த நான்கு மணி நேரத்தில் பெய்துள்ளது.

News May 16, 2024

செல்பி எடுக்க கூடாது ஆட்சியர் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்டத்தில் கோடை மழை துவங்கியுள்ளதால், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற அபாயகரமான நீர்நிலைகளின் கரையோரங்களில் நின்றுகொண்டு பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்த்திட வேண்டும். குழந்தைகள், மாணவர்களை பெற்றோர்கள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

image

புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் தாய் உள்ளிட்ட 3 குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள், பொதுமக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!