news

News March 28, 2024

ரூபாய் நோட்டை மாற்ற முடியாது. RBI அறிவிப்பு

image

ஏப்ரல் 1ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நோட்டுகளை தற்போது ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதி மட்டும் வங்கிக் கணக்குகள் முடித்து வைக்கப்படுவதால் அன்றைய தினம் 2000 நோட்டுகள் பெறப்படாது என்று RBI அறிவித்துள்ளது.

News March 28, 2024

தடுமாறும் ராஜஸ்தான் அணி

image

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி தடுமாறி வருகிறது. ஜெய்பூரில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக ஜெய்ஸ்வால் 5, பட்லர் 11, சாம்சன் 15 ரன்களில் அவுட்டாகினர். ராஜஸ்தான் அணி தற்போதுவரை 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 46 ரன்களை எடுத்துள்ளது.

News March 28, 2024

‘Vibe குமார்’ படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்

image

கோகுல் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கொரோனா குமார்’ எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில், முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர், சிம்பு படத்தில் இருந்து விலக, அவருக்கு பதிலாக விஷ்ணு விஷால் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். ‘Vibe குமார்’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள இப்படத்தில், அதிதி சங்கர், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

News March 28, 2024

தண்ணீர் பீய்ச்சுவதை முறைபடுத்த வேண்டும்

image

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை முறைபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் அழகர் பவனியின் போது பீய்ச்சியடிக்கப்படும் தண்ணீரால் சிலையும், நகைகளும் சேதமடைவதை நீதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

News March 28, 2024

BREAKING: பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு

image

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் (வெள்ளிக் கிழமை) பணிநாள் என்பதால் அனைவருக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

நாளை பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்

image

ஈரோடு திமுக வேட்பாளரை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை பரப்புரையை தொடங்குகிறார். திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். ஈரோட்டில் பரப்புரையை தொடங்கும் கமல் சேலம், திருச்சி, சிதம்பரம், சென்னை, மதுரை, தூத்துக்குடி, கோவையை தொடர்ந்து பொள்ளாச்சியில் ஏப்.16இல் நிறைவு செய்கிறார்.

News March 28, 2024

4% நிறுவனங்கள் மட்டுமே இதை சமாளிக்க முடியும்

image

இந்தியாவில் சைபர் அச்சுறுத்தல்களை சமாளிக்க 5%க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டும் தயாராக இருப்பதாக சிஸ்கோ நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. சுமார் 1,000 தனியார் நிறுவன தலைவர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் உள்ள 59% நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பை உருவாக்கும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உலகளவில் 3% நிறுவனங்கள் மட்டுமே சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.

News March 28, 2024

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

image

குரூப் 1 தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 93 பணியிடங்களுக்காக குரூப்-1 தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> இணையதளத்தில் காணலாம்.

News March 28, 2024

இந்தியாவின் கார்கள் ஏற்றுமதி பழைய நிலைக்கு திரும்பியது

image

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்கள் ஏற்றுமதி, கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 6.75 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய 2020-21ஆம் ஆண்டில், கார்கள் ஏற்றுமதி 4.04 லட்சமாக குறைந்தது. கடந்த 2022-23ஆம் ஆண்டில் 6.63 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

News March 28, 2024

அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி

image

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் போபண்ணா, ஆஸி.,யின் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் செம் வெர்பீக், ஆஸி.,யின் பேட்ரிக் சுமித் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி 6-3, 6-7(4), 7-10 என்ற செட் கணக்கில் வென்றது. இதையடுத்து அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கிரானோல்லர்ஸ், அர்ஜெண்டினாவின் ஹொராசியோ ஜோடியை போபண்ணா ஜோடி எதிர்கொள்கிறது.

error: Content is protected !!