News March 28, 2024
4% நிறுவனங்கள் மட்டுமே இதை சமாளிக்க முடியும்

இந்தியாவில் சைபர் அச்சுறுத்தல்களை சமாளிக்க 5%க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டும் தயாராக இருப்பதாக சிஸ்கோ நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. சுமார் 1,000 தனியார் நிறுவன தலைவர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் உள்ள 59% நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பை உருவாக்கும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உலகளவில் 3% நிறுவனங்கள் மட்டுமே சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.
Similar News
News January 21, 2026
‘துரந்தர் 2’ பட டீசருக்கு ‘A’ சான்றிதழ்

₹1,000+ கோடி வசூலை ஈட்டி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘துரந்தர்’ படத்தின் 2-ம் பாகம் குறித்த அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என 2-ம் பாகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. 1:48 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் டீசருக்கு CBFC, ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் மார்ச் 19-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. யாருக்கெல்லாம் ‘துரந்தர்’ படம் பிடிச்சிருந்தது?
News January 21, 2026
5 மாநில தேர்தலால் IPL தாமதமாகிறதா?

IPL 2026 மார்ச் 26-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரை அட்டவணை வெளியிடப்படவில்லை. இதற்கு WB, TN உள்ளிட்ட 5 மாநில தேர்தலே காரணம் என்றும், தேர்தல் தேதியை ECI அறிவித்த பிறகே அட்டவணையை இறுதிசெய்ய IPL நிர்வாகம் முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரேநேரத்தில் தேர்தலுக்கும், போட்டிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது சிக்கல் என்பதால் 18 நகரங்களில் IPL-ஐ நடத்த BCCI திட்டமிட்டுள்ளதாம்.
News January 21, 2026
BREAKING: திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

OPS ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், OPS விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதனால், விரைவில் OPS-ம் திமுகவில் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.


