News March 28, 2024
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 93 பணியிடங்களுக்காக குரூப்-1 தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு <
Similar News
News July 6, 2025
போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் தகவல்

காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் சில திருத்தங்களை மட்டும் ஹமாஸ் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து, ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலஸ்தீன – அமெரிக்க பேச்சாளர் பிஷாரா பாஹ்பா, முன்மொழிவின் திருத்தங்கள், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தடுக்காது என நினைக்கிறேன் என்றார்.
News July 6, 2025
சாக்ரடீஸ் பொன்மொழிகள்

*மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வமாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை. * உங்களை நீங்களே அறிவதுதான் ஞானத்தின் உச்சம்.
*உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானமாகும். *வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணமல்ல, ஒரு தீய வாழ்க்கையை வாழ்வதே ஆகும். *எல்லா போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன.
News July 6, 2025
வேற லெவல்… அஜித் அப்படியே இருக்காரே..

கார் பந்தயத்தில் தீவிர ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ மற்றும் F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். பந்தயங்களில் பங்கேற்றாலும், முழுநீள ரேஸ் படத்தில் நடிக்காத அஜித்தின் இந்த ஆசை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எடிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.