India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள், 30 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று காலை 10.10 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் வரிசையாக வாங்கும்படி வசதி செய்யப்பட்டிருந்ததால், இணையதள பக்கங்கள் முடங்கவில்லை. இருப்பினும், விரைவாகவே விற்றுத் தீர்ந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 11 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை.,யில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், 10%க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளுக்கு நடப்பாண்டில் அனுமதி அளிக்காமல் இருக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படாமல், 5%க்கும் கீழ் மாணவர் சேர்க்கை இருந்த 11 பொறியியல் கல்லூரிகளை மூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. சங்ரூர் பகுதியில் கடந்த 20ஆம் தேதி விஷ சாராயம் குடித்து உடல்நிலை பாதித்த ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 20ஆம் தேதி 4 பேரும், 21ஆம் தேதி 4 பேரும், 22ஆம் தேதி 8 பேரும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இந்நிலையில் இன்று மேலும் 5 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று மதியம் மொஹாலியில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இப்போட்டியில் களமிறங்க உள்ளார். 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கார் விபத்துக்கு பிறகு, தொடர் பயிற்சியின் மூலம் தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளார். சுமார் 454 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆடுகளத்தில் களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

வங்கதேச எல்லையைக் கடக்க முயன்ற தாம்பரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (SSI) செல்வராஜை, அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. மடிப்பாக்கத்தில் தங்கி பணியாற்றி வந்த இவர், விடுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜானியாபாத் என்ற இடத்தில் சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு தேனி, திருச்சி என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தேனி தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி, தானே களமிறங்க முடிவு செய்திருக்கிறார். தனது விருப்பத்தின்படியே டிடிவி தேனியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மதுபான முறைகேடு வழக்கில் கடந்த 15ஆம் தேதி கைது செய்த அவரை 7 நாள் காவலில் E.D. எடுத்திருந்தது. காவல் முடிந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, E.D. மீண்டும் 5 நாள் விசாரணைக்கு அனுமதிகேட்டது. ஆனால் 3 நாள் மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.

அரசியலில் மத நம்பிக்கைகளை கலந்தது போல இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் முதல்வர், அவரை காழ்ப்புடன் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.16,71,877 கோடி சொத்துக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் சோவியத் யூனியனின் கேஜிபி உளவுத்துறை அதிகாரியான அவர், 5 முறை அதிபராகியுள்ளார். அவருக்கு ரூ.16,71,877 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், அதில் 19 பங்களாக்கள், 700 கார்கள், 58 விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சொகுசு கப்பலும் அடங்குமென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாஜக ஆதரவுடன் ஒரேயொரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்ததைக் கண்டு அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், பாஜகவிடம் 10 தொகுதிகளை பெறுவார், அதில் போட்டியிடலாம் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிட ஒப்புக் கொண்டதைக் கண்டு, இது என்ன நிலைப்பாடு என தெரியாமல் அவர்கள் குழம்பியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.