news

News April 5, 2024

எலுமிச்சை கிலோ ₹130

image

கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில் எலுமிச்சை பழம் விலை கிலோ ₹130 வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 100 டன் எலுமிச்சை பழங்கள் கொண்டுவரப்படும். தற்போது கோடை சீசனையொட்டி தேவை அதிகரித்துள்ள சூழல் எலுமிச்சை வரத்து 40 டன்னாக குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்பனையில் கிலோ ₹100, சில்லறையாக கிலோ ₹130க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News April 5, 2024

தேர்தலுக்குப் பின் செல்லாக்காசாக மாறிவிடுவார்

image

தமிழக மக்களுக்கு பல முறை வேட்டு வைத்த பிரதமர் மோடிக்கு, மக்களவைத் தேர்தலில் நாம் வேட்டு வைக்க வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து டெல்டா மாவட்டங்களில் பிரசாரம் செய்து வரும் அவர், “தமிழகம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. அந்த 29 பைசா என்பது இன்று செல்லாக்காசு. வரும் தேர்தலுக்குப் பிறகு மோடியும் செல்லாக்காசாக மாறிவிடுவார்” எனக் கூறினார்.

News April 5, 2024

கேப்டன்சியுடன் பெரும் தொகை சம்பளம்?

image

மும்பை அணி வீரர் ரோஹித் ஷர்மாவை வளைத்துப் போட சன் ரைஸர்ஸ் ஐதராபாத் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. MI கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்ட அவரை வாங்க, ஐபிஎல் அணி உரிமையாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில், ரோஹித்துக்கு கேப்டன் பதவியுடன் மிகப்பெரிய தொகையையும் ஊதியமாக வழங்க SRH அணி நிர்வாகம் தயாராக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

News April 5, 2024

லாலு பிரசாத் யாதவுக்கு பிடி வாரண்ட்

image

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு க்வாலியர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. 30 ஆண்டுகள் பழமையான வழக்கிற்கு தேர்தல் நேரத்தில் பிடி வாரண்ட் வழங்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 1995ஆம் ஆண்டு லாலு முதல்வராக இருந்தபோது ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் தற்போது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

தமிழக உரிமைகளை மீட்போம்

image

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா எனக் கேட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் பதிலடி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X-இல் பதிவிட்டுள்ள அவர், “திமுக வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி! அதிமுக, பாஜக பறித்த உரிமைகளை மீட்போம்” எனக் கூறியுள்ளார்.

News April 5, 2024

உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்

image

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும். சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 2 – 3 முறை இஞ்சி டீ குடித்து வந்தால் உடல் எடை குறையும். பச்சை காய்கறிகள் போன்ற கலோரி குறைந்த, சத்துக்கள் மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

News April 5, 2024

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது

image

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கொருக்குப்பேட்டையில் வெண்புறாவை பறக்கவிட்டு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த அவர், ‘படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை’ என்றார்.

News April 5, 2024

பதிரனா, முஸ்தஃபிசுர் விளையாடவில்லை

image

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வீரர்கள் மதிஷா பத்திரனா மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர், ஆடும் 11 அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக தீக்‌ஷனா மற்றும் மொய்ன் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை அணியின் முக்கிய பவுலர்களான இருவரும் இன்றையப் போட்டியில் விளையாடாதது CSK ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News April 5, 2024

இந்தியா அழிந்துவிடும் என நினைத்தனர்

image

கொரோனா காலத்தில் இந்தியா அழிந்துவிடும் என பலர் நினைத்தபோதும், 5ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்றினோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிற கட்சிகளைப் போல வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் வெளியிட மாட்டோம் என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடிய அவர், பாஜக நிச்சயம் சொல்வதை செய்யும் என உறுதி அளித்தார். மேலும், 10 ஆண்டுகளாக மக்கள் அதனை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

News April 5, 2024

“இவர்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர்”

image

விளிம்புநிலை மக்களுக்கு ஆறுதல் அளிக்கிற வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர் செய்யும் வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளதாக கூறிய அவர், சமூக நீதியை அடிப்படையாக வைத்து வாக்குறுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார். மேலும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் எனக் கூறினார்.

error: Content is protected !!