News April 5, 2024
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கொருக்குப்பேட்டையில் வெண்புறாவை பறக்கவிட்டு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த அவர், ‘படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை’ என்றார்.
Similar News
News February 11, 2026
காதலனை கரம்பிடித்தார் நடிகை கீர்த்தி ❤️❤️

பிரபல தமிழ் சீரியல் நடிகை கீர்த்திக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இன்ஸ்டாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி, தனது நீண்டகால காதலர் சாய் க்ரிஷை கரம் பிடித்துள்ளார். இந்த காதல் திருமணத்துக்கு கிர்த்தி ரசிகர்கள் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
News February 11, 2026
நாளை முதல் பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கும்!

அரசு நிகழ்ச்சிகளில் <<19107777>>வந்தே மாதரம்<<>> பாடலை இசைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிகளில் அன்றாட வகுப்புகளை தொடங்குவதற்கு முன், இப்பாடலை கூட்டுப் பாடலாக பாடி மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இப்புதிய அறிவிப்பால், நாளை முதல் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை பாட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
News February 11, 2026
ஆபிஸில் சீக்ரெட்டை ஷேர் பண்றீங்களா?

ஆபிஸில் சக ஊழியர்களிடம் சீக்ரெட்களை பகிர்வது சரியானது அல்ல என சைக்காலஜிஸ்டுகள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, பர்சனல் லைஃப், நிதி நிலை குறித்து பேசவே கூடாதாம். இதற்கு சில காரணங்களும் சொல்கிறார்கள். சம்பளம் குறித்து பேசுவது பொறாமைக்கு வழிவகுக்கலாம். பர்சனல் விஷயங்களை பகிர்ந்தால், ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் பிரிய, நம்மை குறித்த சீக்ரெட் வெளியாகிவிடுமோ என்ற தேவையற்ற பதற்றத்தை கொடுக்கும். உஷாரா இருங்க!


