News April 5, 2024
பதிரனா, முஸ்தஃபிசுர் விளையாடவில்லை

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வீரர்கள் மதிஷா பத்திரனா மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர், ஆடும் 11 அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக தீக்ஷனா மற்றும் மொய்ன் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை அணியின் முக்கிய பவுலர்களான இருவரும் இன்றையப் போட்டியில் விளையாடாதது CSK ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News February 7, 2026
முஸ்லிம் கட்சிகளுக்கு பாராபட்சம் காட்டும் திமுக?

கூட்டணி கட்சிகளுக்கு எப்படியெல்லாம் தொகுதிகளை குறைத்து கொடுக்கலாம் என திமுக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 2 முஸ்லிம் கட்சிகளுக்கு (IUML, மமக) 5 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது திமுக. ஆனால் தற்போது 4 முஸ்லிம் கட்சிகளுக்கும் சேர்த்தே 5 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்திருக்கிறதாம். இதனால் அதிருப்தியில் உள்ள முஸ்லிம் கட்சிகள், திமுக கூட்டணியை விட்டு விலகுமா என கேள்வியும் எழுந்துள்ளது.
News February 7, 2026
கூட்டணி விவகாரத்தில் CM ஸ்டாலின் முன் உள்ள சவால்கள்

பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள போதிலும் கூட்டணி விவகாரம் இன்னும் முடியாமல் உள்ளது. தங்கள் கூட்டணி வலுவாக உள்ளதாக திமுகவினர் கூறி வரும் போதிலும், காங்., விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, மநீம என அனைவருமே கூடுதல் சீட்டுகள் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அதற்கு புதிய கட்சியின் வருகையே காரணம் எனக் கூறப்படுகிறது. இதனை சமாளிக்க ஸ்டாலின் திமுகவில் விரைவில் குழு ஒன்றை அமைக்க உள்ளாராம்.
News February 7, 2026
அறுபடை வீடுகளுக்கும் செல்வாரா PM மோடி?

மார்ச் 1-ல் மதுரையில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் PM மோடி பங்கேற்கவுள்ளார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாக நயினார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அறுபடை வீடுகளுக்கும் PM மோடி சென்று தரிசனம் செய்துவிட்டு, கோயில் நிர்வாகங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அவர் பார்க்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


