India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாஜக வேட்பாளரின் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சென்னைக்கு வரும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஊழல் கட்சிகள் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உண்மையான ஊழல் கட்சியே பாஜகதான் என்றார். மேலும், தேர்தல் ஆணையம் கட்சி பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரப்புரையில் இருந்த தமிழ்மணி திடீரென மயங்கி விழுந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்காக நாமக்கல் தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

KKR அணிக்கு எதிரான லீக் போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற CSK அணியை ஷ்ரேயஸ் ஐயர் பாராட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “சேப்பாக்கம் மைதானத்தின் சூழ்நிலையை கணித்து எங்களால் விளையாட முடியாததால் தோற்றோம். CSK அணியின் வீரர்கள் அதன் தன்மையை மிகக் கச்சிதமாக புரிந்து வைத்திருப்பதாலேயே அவர்களால் எளிதாக வெற்றி பெற முடிந்தது” எனக் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி மோசடி என ராமதாஸ் விமர்சித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறி வந்த காங்கிரஸ், தற்போது சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறது. இது மோசடி என விமர்சித்துள்ள அவர், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லையென்றாலும் வாக்குறுதியில் நியாயம் வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீருக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. இதனிடையே, அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், 2020 முதல் 2023 வரை அமீர் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள், வங்கி கணக்குகளை சமர்ப்பிக்கவும் வலியுறுத்தியது. இதுதொடர்பாக பதிலளிக்க அமீர் கால அவகாசம் கோரியுள்ளார்.

கோடை விடுமுறையையொட்டி, சென்னை – நெல்லை இடையே வாராந்தர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், சிவகங்கை, விருதுநகர் வழியாக காலை 8.30க்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஃபிட்டர், வெல்டர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக், கணினி ஆபரேட்டர், சுகாதார ஆய்வாளர் மெஷினிஸ்ட் உள்ளிட்ட 1,113 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், வரும் மே மாதம் 1ஆம் தேதிக்குள் <

கார்த்தி மற்றும் தமன்னா நடித்த ‘பையா’ திரைப்படம், வரும் 11ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு, இயக்குநர் லிங்குசாமி கார்த்தியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, “பையா படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாக இருப்பதாக என் நண்பர்கள் கூறுவார்கள்” என கார்த்தி தெரிவித்துள்ளார். பெரும் வெற்றியைத் தந்த இப்படம், தற்போது 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாகவுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் அவர் மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகான அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னையில் போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் வீட்டின் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் கொடுத்து மீனாட்சி என்ற அப்பெண், பணிமனையை திறந்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, பாஜக மண்டல தலைவர் மருதுபாண்டி வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.