India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐபிஎல் தொடரை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி கேட்டிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். தற்போதைய நிலவரப்படி, திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்ப அனுமதி உண்டு. கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றை ஒளிபரப்பினால் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும். உங்களுக்கு தியேட்டரில் IPL பார்க்க விருப்பமா?
சித்தார்த்தை திருமணம் செய்தது ஏன்? என்று அவரின் மனைவியும், நடிகையுமான அதிதி ராவ் பேட்டியளித்துள்ளார். சித்தார்த் செயற்கைத்தனம் இல்லாதவர் என்றும், அவர் மிகவும் நல்லவர், எப்போதும் ஒரே மாதிரி இருக்கக்கூடிய நபர் என்றும் அவர் நெகிழ்ந்துள்ளார். திருமணம் செய்தபோது சரிவர பட வாய்ப்பில்லை, ஆனால் தற்போது 2 பேரும் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த பஞ்சாப் அணி, வெறும் 16.2 ஓவர்களில் அந்த டார்கெட்டை கடந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ப்ரப்சிம்ரன் சிங் அபாரமாக விளையாடி 69 (34) ரன்கள் எடுத்தார்.
உ.பி.யை சேர்ந்த <<15896779>>பப்லு,<<>> தனது மனைவி ராதிகாவுக்கும், அவரது காதலர் விகாஸுக்கும் தொடர்பிருப்பதை அறிந்து திருமணம் செய்து வைத்தது தெரியும். இதில் பப்லுவின் தாயார் தலையிட்டு, 2 குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி, அவர்கள் நலனுக்காக ராதிகாவை திரும்ப வரும்படி கூற, ராதிகாவும் விகாசை விட்டுவிட்டு திரும்பி விட்டார். அவரை திரும்ப ஏற்ற பப்லு, ராதிகா அப்பாவி எனத் தெரிவித்துள்ளார். நீங்க என்ன சொல்றீங்க?
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் AI-ஐ பயன்படுத்தி ‘ஜிப்லி’ கதாபாத்திரங்களாகவே தங்கள் புகைப்படத்தை மாற்றி டிரெண்ட் செய்து வருகிறார்கள். CM ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆகியோரின் புகைப்படங்களும் இதேபோல் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இதையடுத்து இன்னொரு அரசியல் பிரபலமும், தனது படத்தை (மேலே) வெளியிட அதுவும் ட்ரெண்டாகி வருகிறது. அவர் யார்னு தெரிஞ்சா, கீழே பதிவிடுங்க.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடுவை, மத்திய அரசு ஏப்.15 வரை நீட்டித்துள்ளது. 12th, Diploma, ITI, Degree படித்த, வேலையில்லாத 21-24 வயதினர் இதில் இணையலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதன் மூலம் டாப்-500 நிறுவனங்களில் மாதம் ₹5,000 உதவித் தொகையுடன், ஓராண்டு internship பெறலாம். மேலும், ஒருமுறை ₹6,000 கிடைக்கும். இணைய: https://pminternshipscheme.com/
ரூ.2,000 நோட்டுகள் 98.21% திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. 2023 மே மாதம் ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக RBI அறிவித்தது. இதையடுத்து ரூ.2,000 நோட்டுகளை திருப்பி அளிக்க 2023 அக்.7 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், RBI அறிவிப்பில், ரூ.6,366 கோடி மதிப்பு ரூ.2,000 நோட்டுகள் தவிர்த்து அனைத்து நோட்டுகளும் திரும்பி விட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் பன்ட்டை ரூ.27 கோடிக்கு லக்னோ ஜெயன்ட்ஸ் அணி வாங்கியிருந்தது. ஆனால், டெல்லிக்கு எதிராக ரன் எடுக்காமல் டக் அவுட்டும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 15 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தார். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, ரூ.27 கோடி வீண் என்று சமூகவலைதளத்தில் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஆரணி அடுத்த சதுப்பேரி பாளையம் கிராமத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் நீச்சல் பழகுவதற்காக கிணற்றில் இறங்கியபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததால் அக்கம் பக்கத்தினரால் காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும், நாளை இருவரும் ஆங்கில பொதுத்தேர்வு எழுதவிருந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
*காலையில் எழுந்ததும் சிறிதளவு இளநீரை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பொலிவாகும். *வெயில் காலத்தில் முகத்தை அதிக முறைகள் சோப்பு போட்டு கழுவக்கூடாது. *லிப்ஸ்டிக், ஐ ஷேடோ போன்றவை வெளிர் நிறங்களில் இருப்பது மிக நல்லதாகும். *வெள்ளரிச்சாறுடன் சிறிதளவு பால் கலந்து முகத்தில் தேய்த்து ஊறிய பின் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கும் *அடிக்கடி பழச்சாறு அருந்தலாம்.
Sorry, no posts matched your criteria.