News April 1, 2025
2 ரன்னில் பன்ட் அவுட்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஐபிஎல்லில் பன்ட்டை ரூ.27 கோடிக்கு லக்னோ ஜெயன்ட்ஸ் அணி வாங்கியிருந்தது. ஆனால், டெல்லிக்கு எதிராக ரன் எடுக்காமல் டக் அவுட்டும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 15 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தார். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, ரூ.27 கோடி வீண் என்று சமூகவலைதளத்தில் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
ராமேஸ்வரம் கோவில் நடை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப் 6ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. திருவிழாவின் 3-ம் திருநாளான இன்று பிப்-10 ம் தேதி சுவாமி அம்பாள் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆதலால், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 10, 2026
சந்திரயான்-4 தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்த ISRO

சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, ISRO அடுத்த நடவடிக்கைக்கு தயாராகி உள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-4 விண்கலம் தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்துள்ளது. 2028-ல் ஏவப்படவுள்ள சந்திரயான்-4, நிலவிலிருந்து மாதிரிகளை பூமிக்குத் கொண்டு வரும் திட்டம். மேலும், சரியான தரையிறங்கும் தளத்தை தேர்வு செய்வது திட்டத்தின் வெற்றிக்கு மிக அவசியம் என்று ISRO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News February 10, 2026
காங்கிரஸை சீண்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன்

கூட்டணி ஆட்சி தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே அவ்வப்போது வார்த்தைப்போர் வெடித்து வருகிறது. இந்நிலையில் எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது என மீண்டும் காங்கிரஸை அமைச்சர் ராஜகண்ணப்பன் சீண்டியுள்ளார். 150 இடங்களில் திமுக வெற்றிபெற போகும் நிலையில், எப்படி ஆட்சியில் பங்கு கொடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


