News April 2, 2025
IPL BREAKING: பஞ்சாப் அபார வெற்றி

இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த பஞ்சாப் அணி, வெறும் 16.2 ஓவர்களில் அந்த டார்கெட்டை கடந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ப்ரப்சிம்ரன் சிங் அபாரமாக விளையாடி 69 (34) ரன்கள் எடுத்தார்.
Similar News
News January 25, 2026
இன்று தேசிய சுற்றுலா தினம்!

ஊர் சுற்றிப் பார்க்க யாருக்கு பிடிக்காது! இந்தியாவின் அழகை உலகிற்கு சொல்லும் விழா என இன்றைய நாளை இன்றை குறிப்பிடலாம். ‘அதிதி தேவோ பவ’ என்ற பண்பாட்டை நினைவூட்டும் விதமாகவும், சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜனவரி 25-ல், ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்படுகிறது. ‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள். உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் எது?
News January 25, 2026
FLASH: திமுகவில் இணைந்த அதிமுக Ex MLA.. EPS அப்செட்

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில், அதிமுக Ex MLA மாதேஸ்வரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் சேலம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் ராஜ்யசபா MP சிவலிங்கம் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். ஆத்தூர் தொகுதியில் 2011 – 2016 வரை MLA ஆக இருந்த மாதேஸ்வரன் திடீரென திமுகவில் இணைந்தது EPS தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News January 25, 2026
3 தமிழக போலீசாருக்கு குடியரசு தலைவர் பதக்கம்

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்புமிக்க சேவைக்கான குடியரசு தலைவர் பதக்கத்தை மகேஸ்வரி IG, குமரவேலு DSP, அன்வர் பாஷா DCP ஆகியோர் பெறவுள்ளனர். இதேபோல, தேவராஜன் DSP, கமாண்டன்ட் மணிவர்மன் உள்ளிட்ட 21 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


