news

News April 2, 2025

பண்ட்டுக்கும் ராகுல் ட்ரீட்மெண்ட்

image

கடந்த ஐபிஎல் சீசனில் கே.எல்.ராகுலின் கேப்டன்ஸி சொதப்பியதால், LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா அவருடன் பொதுவெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோன்று, பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் LSG தோற்றதால், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை, சஞ்சீவ் பொதுவெளியில் கடிந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரிஷப் பண்ட் ட்ரெண்டிங்கிலும் உள்ளார்.

News April 2, 2025

75 ஆண்டு கால உறவு.. வாழ்த்து கூறிய சீன அதிபர்

image

இந்தியா- சீனா இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் முர்முவுக்கு சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், இருதரப்பு உறவுகள் டிராகன்- யானை நடன வடிவத்தை எடுக்கவும், நீண்டகால கண்ணோட்டத்தில் இருந்து இருதரப்பு உறவுகளை கையாளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொதுவான வளர்ச்சியை உறுதிசெய்ய இருநாடுகளும் இணைந்து செயல்படவும் கேட்டுக்கொண்டார்.

News April 2, 2025

ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

image

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

News April 2, 2025

1 ரன்னுக்கு ₹1.59 கோடி சம்பளம்!

image

ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ₹27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடப்பு IPLல் அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதை கணக்கிட்டால், அவருக்கு 1 பந்துக்கு ₹1.04 கோடியும், 1 ரன்னுக்கு ₹1.59 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது.

News April 2, 2025

சீனாவை அழைத்த வங்கதேசம்.. வடகிழக்கில் கொதிநிலை

image

வடகிழக்கு மாநிலங்களை லாக் செய்ய, சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும் என அந்நாட்டின் இடைக்கால அரசு தலைவர் யூனுஸ் பேசினார். இதை கண்டித்த அசாம் முதல்வர் சர்மா, வடகிழக்கு மாநிலங்களையும், பிரதான இந்தியாவையும் இணைக்க சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தை உடைக்க TMP தலைவர் மனிக்யாவும், மணிப்பூரை கண்டுக்காத அரசு, இதில் கவனம் செலுத்த காங். தலைவர் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்.

News April 2, 2025

USA-வில் இன்று அமல்.. இந்தியாவுக்கு பிரச்னை?

image

டிரம்ப் அறிவித்தபடி, USA-வில் வெளிநாட்டு இறக்குமதி பொருள்களுக்கான வரி உயர்வு இன்று முதல் அமலாகிறது. மற்ற நாடுகளில் USA இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் அதே சதவிகித வரி, USA-விலும் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால் கனடா, மெக்ஸிகோ நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். USA விதித்த சில நிபந்தனைகளை ஏற்றதால், இந்திய பொருட்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது.

News April 2, 2025

மா சே துங் பொன்மொழிகள்

image

*மரம் அமைதியைத்தான் விரும்புகிறது. ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை. *போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். *புரட்சி என்பது இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது. * துப்பாக்கியைக் கொண்டே உலகம் முழுவதையும் திருத்தி அமைக்கலாம். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானால் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும்.

News April 2, 2025

இந்த மாதம் 3 படங்கள் மட்டும் போதுமா?

image

வரும் 10ஆம் தேதி அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது. அதேபோல், வரும் 18ஆம் தேதி சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’, 24ஆம் தேதி சுந்தர் சி, வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீசாக உள்ளது. இதை தவிர்த்து, பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் இந்த மாதம் ரிலீசாகவில்லை. 2925-ன் முதல் 3 மாதங்களில் 65 படங்கள் வெளியான நிலையில், இந்த மாதம் 3 முக்கிய படங்கள் மட்டுமே ரிலீசாக உள்ளது.

News April 2, 2025

தோனி இல்லை என்றால் IPL-க்கு தான் இழப்பு: கெயில்

image

IPL-ல் தோனி விளையாடுவதன் மூலம் அதன் மதிப்பு பல மடங்கு உயர்வதாக கெயில் தெரிவித்துள்ளார். தலைசிறந்த வீரரான அவர் மீது தேவையில்லாத அழுத்தங்களை செலுத்த வேண்டாம் எனவும், அவர் 11ஆவது வீரராக களமிறங்கினாலும் தனக்கு கவலையில்லை எனவும் கெயில் கூறியுள்ளார். மேலும், தோனியின் கீப்பிங் திறன் அதே ஷார்ப்புடன் இருப்பதாகவும், தோனி விளையாடாவிட்டால் அது IPL-க்குத்தான் இழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 224 ▶குறள்: இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. ▶பொருள்: ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

error: Content is protected !!