News April 2, 2025

75 ஆண்டு கால உறவு.. வாழ்த்து கூறிய சீன அதிபர்

image

இந்தியா- சீனா இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் முர்முவுக்கு சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், இருதரப்பு உறவுகள் டிராகன்- யானை நடன வடிவத்தை எடுக்கவும், நீண்டகால கண்ணோட்டத்தில் இருந்து இருதரப்பு உறவுகளை கையாளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொதுவான வளர்ச்சியை உறுதிசெய்ய இருநாடுகளும் இணைந்து செயல்படவும் கேட்டுக்கொண்டார்.

Similar News

News January 14, 2026

தருமபுரி: UPI error-ஆ? பேங்கிடம் இருந்து ரூ.100 பெறலாம்!

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் புகார் பண்ணுங்க. (HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030) பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 14, 2026

லெட்டர் பேடு கட்சிகளுடன் அதிமுக கூட்டணி: ரகுபதி

image

அதிமுக – பாஜக கூட்டணி தேய்ந்து கொண்டேதான் போகுமே தவிர, வலுவாக அமையாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். லெட்டர் பேடு கட்சிகள்தான் அதிமுக கூட்டணிக்கு செல்லும் எனக் கூறிய அவர், எங்களுக்கு யாரும் நெருக்கடி தர முடியாது என்று காங்., கட்சியினருக்கும் மறைமுகமாக பதிலடி கொடுத்தார். மேலும், ஜன நாயகன் படத்துக்காக விஜய் குரல் கொடுக்காததை வைத்தே, அவருடைய தைரியத்தை தெரிந்துக் கொள்ளலாம் எனவும் சாடினார்.

News January 14, 2026

தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹15,000 மாறியது

image

<<18853147>>ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ஒரே நாளில் ₹15 உயர்ந்து ₹307-க்கும், கிலோ வெள்ளி ₹15,000 உயர்ந்து ₹3,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹50 ஆயிரம் அதிகரித்துள்ளது. பலர் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்வதால், தட்டுப்பாடும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!