News April 2, 2025
இந்த மாதம் 3 படங்கள் மட்டும் போதுமா?

வரும் 10ஆம் தேதி அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது. அதேபோல், வரும் 18ஆம் தேதி சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’, 24ஆம் தேதி சுந்தர் சி, வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீசாக உள்ளது. இதை தவிர்த்து, பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் இந்த மாதம் ரிலீசாகவில்லை. 2925-ன் முதல் 3 மாதங்களில் 65 படங்கள் வெளியான நிலையில், இந்த மாதம் 3 முக்கிய படங்கள் மட்டுமே ரிலீசாக உள்ளது.
Similar News
News July 8, 2025
BREAKING: CM ஸ்டாலின் – திருமாவளவன் சந்திப்பு!

அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலினை, திருமாவளவன் சந்தித்து பேசினார். ஏற்கெனவே கூட்டணியில் உள்ள வைகோ கடந்த வாரம் சந்தித்து பேசியிருந்த நிலையில், இன்று திருமாவளவன் சந்தித்துள்ளார். 2026 தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், CM ஸ்டாலின் அடுத்தடுத்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். வரும் நாள்களில் கம்யூனிஸ்ட் மற்றும் மற்றக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
News July 8, 2025
பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்!

➤<<16987572>>கடலூர் <<>>லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சோகம்.. 3 மாணவர்கள் மரணம்
➤கடலூர் பள்ளி வேன் விபத்து.. <<16988553>>CM ஸ்டாலின் <<>>& இபிஎஸ் இரங்கல்
➤<<16987858>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹400 உயர்வு
➤நாடு முழுவதும் <<16987412>>நாளை <<>>பொது வேலைநிறுத்தம்.. பஸ் சேவை பாதிப்பு ➤RCB வீரர்<<16987106>> யஷ்<<>> தயாள் மீது FIR ➤<<16987497>>சாதி <<>>குறித்த பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா
News July 8, 2025
யாரும் நெருங்க முடியாத கங்குலியின் ரெக்கார்ட்!

இன்று ‘தாதா’ <<16986348>>கங்குலியின் <<>>பிறந்தநாள். ODI-ல் தொடர்ந்து 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய ஒரே வீரர் செளரவ் கங்குலி தான். 1997-ல் சகாரா கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வரிசையாக 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் கங்குலி. இந்த ரெக்கார்டை இன்று வரையிலும் யாராலும் வீழ்த்த முடியவில்லை. இது மட்டுமின்றி, ODI-ல் 11,363 ரன்களை குவித்து அதிக ரன்களை அடித்த 2-வது இந்தியரும் ‘தாதா’ தான்.