news

News April 2, 2025

CISFஇல் 1,161 காலியிடங்கள்.. நாளையே கடைசி நாள்

image

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி <>cisfrectt.cisf.gov.in.<<>> என்ற இணையதளத்தில் நடைபெறுகிறது. இந்த வேலைக்கான கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பாக 18-23 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT.

News April 2, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

News April 2, 2025

BREAKING: பெங்களூரு அணி பேட்டிங்

image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது. போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்பாேர்ட்ஸ் டிவி சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாக காணலாம்.

News April 2, 2025

இந்தியாவின் பணக்கார பெண் இவர்தான்…!

image

இந்தியாவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், டாப் 10-ல் இருக்கும் ஒரே பெண் சாவித்ரி ஜிண்டால் மட்டுமே. ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவரான அவர், நாட்டின் மூன்றாவது பணக்காரராகவும், முதல் பெண் பணக்காரராகவும் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி. இந்த பட்டியலில் அம்பானி (ரூ.7.90 லட்சம் கோடி), அதானி (ரூ.4.80 லட்சம் கோடி) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

News April 2, 2025

IPL: கேப்டன் மாற்றம்

image

காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருந்த சஞ்சு சாம்சன் மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார். முதல் 3 போட்டிகளில் ரியான் பராக் வழிநடத்த இம்பேக்ட் பிளேயராக மட்டுமே அவர் களமிறங்கி இருந்தார். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்த சஞ்சு, கேப்டனாக விளையாட இருக்கிறார். ராஜஸ்தான் அணி அடுத்ததாக ஏப்.5-ல் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

News April 2, 2025

வக்ஃபு மசோதாவை பாஜகவால் நிறைவேற்ற முடியுமா?

image

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 240 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களையும் சேர்த்து பாஜகவுக்கு 295 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் டிடிபி, ஜேடியூவின் 28 எம்.பி.க்களும் அடங்குவர். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு 234 எம்.பி.க்களே உள்ளன. இதனால் மக்களவையில் மசோதா நிறைவேறுவது உறுதி.

News April 2, 2025

வளர்ப்பு நாய்க்கு ரூ.12 லட்சம் உயில் எழுதி வைத்த டாடா

image

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயில் விவரம் வெளியாகியுள்ளது. அதில், சமையலராக இருந்த ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடி, வீட்டு பணியாளராக இருந்த சுப்பையா கோனாருக்கு ரூ.66 லட்சம், டிரைவருக்கு ரூ.19.50 லட்சம், செயலர் டெல்னாஸ் கில்டருக்கு ரூ.10 லட்சம், ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த வளர்ப்பு நாய் டிட்டோ பராமரிப்புக்கு ரூ.12 லட்சம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். பலரின் கடன்களையும் ரத்து செய்துள்ளார்.

News April 2, 2025

விபத்தில் பலியான 4 போலீஸார் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்

image

சாலை விபத்துகளில் பலியான 4 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உதவி ஆய்வாளர் மெர்ஸி உள்ளிட்டோர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி, வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் இது பேரிழப்பு எனவும், அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

13 வயதில் கொலை… சிறுவனின் கண்ணை மறைத்த ஆத்திரம்!

image

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. செல்போனை பிடுங்கி தண்ணீரில் வீசிய பெண்ணை, 13 வயது சிறுவன் கொலை செய்துள்ளான். வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் சிறுவனின் போனை பிடுங்கி தண்ணீரில் வீசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்து விபரீத செயலில் ஈடுபட்ட சிறுவன், தற்போது போலீசாரின் பிடியில் சிக்கி இருக்கிறான்.

News April 2, 2025

பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல்: இந்தியா 3ம் இடம்

image

பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. போர்ப்ஸின் பட்டியலில் 902 பெரும் கோடீஸ்வரர்களுடன் USA முதலிடத்தில் உள்ளது. 902 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.581 லட்சம் கோடி. இதையடுத்து, சீனா 450 பேருடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 205 பேருடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. 205 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.80.41 லட்சம் கோடி ஆகும்.

error: Content is protected !!