news

News April 3, 2025

வக்பு வாரிய மசோதா: ராஜ்யசபாவில் தாக்கல்

image

வக்பு வாரிய திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் தொடங்கியபோது எதிர்க்கட்சித் தலைவரான கார்கேவுக்கும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. கர்நாடக வக்பு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அனுராக் தாக்கூர் எழுப்பிய குற்றச்சாட்டை பாஜக நிரூபிக்க வேண்டும் அல்லது அவரைப் பதவி நீக்க வேண்டும் என கார்கே ஆவேசமாக பேசினார்.

News April 3, 2025

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: IMD

image

17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது. மேலும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.

News April 3, 2025

‘எம்புரான்’ திரைப்படத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு!

image

‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு எதிரான இந்த திரைப்படத்தை இங்கு திரையிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என விமர்சித்துள்ளார். அதே நேரம் வக்பு வாரிய மசோதாவை பாமக ஆதரிக்கவில்லை என்றும், இஸ்லாமியர்களின் சொத்துகளை அவர்களே நிர்வகிப்பது தான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

கரும்பு கொள்முதல் விலை ₹4,000ஆக உயர்வு: அமைச்சர்

image

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹4,000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நெல் குவிண்டாலுக்கு ₹2,500ஆக வழங்கப்படும் என்றும் கூறினார். அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்கள் கருத்து என்ன?

News April 3, 2025

அரசியலில் பகை, சினிமாவில் சமரசம்!

image

விஜய் அரசியலில் கடுமையாக விமர்சிப்பது திமுகவைத் தான். இரு தரப்பிற்கு மத்தியிலும் பெரிய உரசல் இருப்பதாக கூறப்படும் சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் வைரலாக, சில நெட்டிசன்கள், இவர்களெல்லாம் கூட்டு தான் என்கின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், பிசினஸ் வேறு, அரசியல் வேறு என்றும் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News April 3, 2025

கருப்பு பேட்ஜ் அணிய மறுத்த அதிமுக MLAக்கள்!

image

வக்பு வாரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும், அதன் கூட்டணிக் கட்சி MLAக்களும் இன்று கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வந்திருந்தனர். அதிமுக MLAக்களுக்கும் பேரவை வளாகத்தில் கருப்புப் பட்டை வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர்கள் அணிய மறுத்துவிட்டனர். பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிமுக ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், போராட்டத்தில் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகியுள்ளது.

News April 3, 2025

50 வயது தாய்க்குப் பதிலாக SSLC தேர்வு எழுதிய மகள் கைது!

image

தாய்க்குப் பதிலாக 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மகள் போலீஸில் சிக்கியுள்ளார். நாகையில், நேற்று ஆங்கிலத் தேர்வின்போது தனித் தேர்வர்கள் பிரிவில் ஒரு பெண் மாஸ்க் அணிந்தவாறு அமர்ந்துள்ளார். சந்தேகமடைந்த அறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தபோது இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. நாகை GHஇல் சமையலராக இருக்கும் 50 வயது சுகந்தியின் பதவி உயர்வுக்காகப் பாசத்தில் மகள் இதை செய்துள்ளார். அன்புக்காக என்றாலும் குற்றம் தானே?

News April 3, 2025

CM பற்றி விமர்சனம்.. வைரலாகும் BJPயின் X பதிவு!!

image

கர்நாடக CM சித்தராமையாவை பற்றி, கர்நாடக BJP வெளியிட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில், இரண்டு போட்டோக்களை அவர்கள் ஒப்பிட்டுள்ளனர். ஒன்றில், இவர் ‘Fast & furious’ என ஹாலிவுட் நடிகர் வின் டீசல் போட்டோவை பதிவிட்டுள்ளனர். அதற்கு பக்கத்தில் ‘மற்றொருவர் மோசடி மற்றும் தீங்கு விளைவிப்பவர்’ காஸ்ட்லி டீசல் என அடைமொழியிட்டு சித்தராமையாவையின் போட்டோவையும் வைத்து விமர்சனம் செய்துள்ளனர்.

News April 3, 2025

கோலி வசமான IPL வரலாற்றின் மிக மோசமான சாதனை

image

IPL தொடரில் இதுவரை அதிக போட்டிகளில் தோல்வியடைந்த வீரர் என்ற மிக மோசமான சாதனை விராட் கோலி வசமாகியுள்ளது. இதுவரை 255 IPL போட்டிகளில் விளையாடிய அவர், 127ல் தோல்வியடைந்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் தினேஷ் கார்த்திக் (125), ரோஹித் (123), தோனி (112) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதென்னடா கிங்கிற்கு வந்த சோதனை என RCB ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

News April 3, 2025

இந்தியாவில் எந்தெந்த துறைகள் பாதிக்கும்?

image

டிரம்பின் அதிரடி வரி விதிப்பால் இந்திய ஜவுளிகள், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஜினியரிங் பொருட்கள் மற்றும் நகை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 26% வரி விதிப்பால், இந்த துறைகள் உடனடியாக பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. மருந்து பொருட்கள் ஏற்றுமதி பாதிக்குமா என்பது போக, போகத் தான் தெரியுமாம். இதனால், இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

error: Content is protected !!