News April 3, 2025
கருப்பு பேட்ஜ் அணிய மறுத்த அதிமுக MLAக்கள்!

வக்பு வாரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும், அதன் கூட்டணிக் கட்சி MLAக்களும் இன்று கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வந்திருந்தனர். அதிமுக MLAக்களுக்கும் பேரவை வளாகத்தில் கருப்புப் பட்டை வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர்கள் அணிய மறுத்துவிட்டனர். பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிமுக ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், போராட்டத்தில் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகியுள்ளது.
Similar News
News January 25, 2026
முந்தைய நாள் வரை KAS அழைத்தார்: TTV

தான் தவெகவுடன் வருவேன் என ஒருநாளும் சொல்லவில்லை என TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் சீனியரான செங்கோட்டையன் அவரே முடிவெடுத்து தவெகவுக்கு போய்விட்டார் என்றும், அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதற்கு முந்தைய நாள் வரை, தன்னை தவெகவில் இணையும்படி அழைத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார். ஆனால் NDA-ல் இணைந்தபின் அழைத்தபோது, அவர் என்னிடம் பேசவே இல்லை எனறு என்றும் கூறியுள்ளார்.
News January 25, 2026
தமிழகத்தை சேர்ந்த தலைவருக்கு பாரத ரத்னா?

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மூவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படாத நிலையில், இந்தாண்டு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜிக்கும், அதேபோன்று தென் TN-ஐ சேர்ந்த தலைவர் ஒருவருக்கும் வழங்கப்படலாம் எனவும் PM அலுவலகத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
News January 25, 2026
கனடா மீது 100% வரி பாயும்: டிரம்ப்

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் ஒருபக்கம் வெனிசுலா, கிரீன்லாந்து நாடுகளை கைப்பற்றி வரும் வேளையில், சீனாவுடன் அமெரிக்காவின் அண்டை நாடான கனடா ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராகி வருகிறது. எனினும் இந்த 100% வரி அமலானால் இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.


