news

News March 16, 2025

மார்ச் 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரம் வரும் 20 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

News March 16, 2025

எதிரிகளை நடுங்க வைக்கும் இந்திய ஆயுதம்! (1/2)

image

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், அது மாதிரி எதிரிகளை நடுங்க வைக்க ஒரு புதிய ஆயுதத்தை களமிறக்கி இருக்கிறது இந்திய ராணுவம். அதன் பெயர் VMIMS. அதாவது வாகனத்தில் பொருத்தப்பட்ட காலாட்படையின் மோர்டார் சிஸ்டம். ஆயுத பலத்தை அதிகரிக்க சிக்கிமின் மலைப்பகுதிகளில் இதனை நிலை நிறுத்தியிருக்கிறது இந்திய ராணுவம். இதன் சிறப்புகள் என்ன? பார்க்கலாம்….

News March 16, 2025

எதிரிகளை நடுங்க வைக்கும் இந்திய ஆயுதம்! (2/2)

image

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதத்தை கடினமான பகுதிகளுக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதன் துல்லியம், துரித ரியாக்‌ஷன் ராணுவத்திற்கு கூடுதல் பலம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் 81மிமீ பீரங்கி பொருத்தப்பட்டிருக்கும். இதனால் இதனை ‘ஆர்மடோ’ என அழைக்கின்றனர். கரடு, முரடான பாதைகளில் கச்சிதமாக எடுத்துச் செல்ல முடியும் என்பதால், எதிரிகளை நிச்சயம் நடுங்க வைக்கும்.

News March 16, 2025

செங்கோட்டையனை புகழ்ந்த ஓபிஎஸ் மகன்

image

கொங்கு நாட்டின் தங்கம் செங்கோட்டையன் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பாராட்டியுள்ளார். செங்கோட்டையனுடைய மனசாட்சி உணர்வு தற்போது வெளிப்படத் துவங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் என்றும், தனது அரசியல் வழிகாட்டிகளில் அவரும் ஒருவர் எனவும் ஜெயபிரதீப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News March 16, 2025

மீண்டும் அதிமுக இணைப்பு: அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்

image

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையிலான மோதல் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்நிலையில், அதிமுக மீண்டும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் அறைகூவல் விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெ.,வுடன் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர் செங்கோட்டையன். ஈகோவை விட்டுக்கொடுத்து விட்டு, பிரிந்து கிடைக்கும் அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News March 16, 2025

வயிற்றை பத்திரமா பாதுகாப்பது எப்படி?

image

வயிறு கெடுவதற்கு HURRY, WORRY, CURRY என்ற 3 காரணங்களை அடுக்குகிறார்கள் டயட்டீசியன்கள். எனவே, கவலையோ, அவசரமோ காட்டக்கூடாது. காரமான உணவையும் தவிருங்கள். அதற்குப் பதில் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, இரவு டின்னரை தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் முடித்துவிடுங்கள். அதே போல், வயிறு முட்ட சாப்பிடாமல் 20% காலியாக வைத்திருந்தால் போதும், அரோக்கியத்தை அசைக்க முடியாது.

News March 16, 2025

INDIA கூட்டணியில் விரிசலா? பிரகாஷ் காரத் பதில்

image

INDIA கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அணி என CPM மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார். INDIA கூட்டணியில் உள்ள சில கட்சிகள் டெல்லி, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலத்தில் நேர் எதிராக அரசியல் செய்வதாகவும், அதனால் அவர்களின் நிலைபாடு மாநில தேர்தல்களில் மாறுவதாகவும் தெரிவித்தார். தேசிய அளவில் பாஜகவை ஒன்றிணைந்து எதிர்ப்பது மட்டுமே தங்களின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 16, 2025

உயிருக்கு போராடும் தமிழ் நடிகர்.. உதவிய உதயநிதி

image

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடுகிறார் பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி. தான் ஒரு நாள் உயிர் வாழ வேண்டுமானாலும் கூட இரு பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும் என்பதால் தனக்கு உதவி செய்யக்கோரி அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ₹5 லட்சம் வழங்க துணை முதல்வர் உதயநிதி உத்தரவின்பேரில், அதற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் டிஸ்சார்ஜ்

image

திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். முதலில் நெஞ்சு வலி என தகவல் பரவிய நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரகுமானின் மகன் அமீன் விளக்கமளித்துள்ளார். வழக்கமான பரிசோதனைகள் முடிந்த பின் அவர் வீடு திரும்பினார்.

News March 16, 2025

திருமணத்திற்கு முன் குழந்தை! தாய் பால் இல்லாமல் மரணம்

image

கோவை அரசு ஹாஸ்பிடலில் திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால், வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்த அப்பெண், ஹாஸ்பிடல் காவலாளியை அணுகியுள்ளார். அவர், தனக்கு தெரிந்த தம்பதிக்கு தத்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்பெண்ணும் சம்மதித்து, அவரிடமே குழந்தையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், அக்குழந்தை தாய்பால் இல்லாமல் உயிரிழந்துள்ளது.

error: Content is protected !!