news

News March 16, 2025

உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைப்பு?

image

உக்ரைன் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், குர்ஸ்கில் ஊடுருவிய உக்ரைன் வீரர்களை உயிருடன் புதின் விட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஆயுதங்களை போட்டு சரணடைந்தால், உயிருடன் விடுவதாக புதின் கூறியிருந்தார். ஆனால் வீரர்கள் சுற்றிவளைக்கப்படவில்லை என உக்ரைன் மறுத்துள்ளது.

News March 16, 2025

இன்றைய (மார்ச் 16) நல்ல நேரம்

image

▶மார்ச்- 16 ▶பங்குனி – 2 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 03:30 PM – 04:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 AM – 06:00 AM ▶எமகண்டம்: 12:00 AM – 01:30 AM ▶குளிகை: 03:00 AM- 04:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி ▶நட்சத்திரம் : ஹஸ்தம்.

News March 16, 2025

எலும்புகள் வலுவாக இருக்க..

image

நமது எலும்புகள் வலுவாக இருக்க என்ன செய்ய வேண்டும்? ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, கால்சியம், வைட்டமின்கள் D மற்றும் K நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை சிறிய அளவில் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் அத்திப்பழம், கடல் மீன், பாதாம் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

News March 16, 2025

பாகிஸ்தானில் இந்திய பாடல்களுக்கு தடைவிதிப்பு

image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கல்வி நிலையங்களில் இந்திய பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் இந்திய பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாப் மாகாண அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News March 16, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 16, 2025

பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. மார்ச் 21 வரை நீடிப்பு

image

பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 518 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 11ஆம் தேதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த அவகாசம் வருகிற 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர், இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை பகிருங்கள்.

News March 16, 2025

இதென்ன சோதனை… டயரின்றி தரையிறங்கிய விமானம்!

image

பாகிஸ்தானில் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. லாகூர் விமான நிலையத்தில் சரியான முறையில் தரையிறங்கிய விமானத்தின் பின்பக்க சக்கரங்களில் ஒன்று மாயமாகி இருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். நடுவானில் சக்கரம் கழன்று விழுந்ததா? அல்லது புறப்படும்போதே சக்கரம் இல்லாமல் இருந்ததா? என விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2025

WPL கோப்பையை வென்றது மும்பை

image

பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை அணி WPL பட்டம் வென்றது. டெல்லி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 ஆண்டு லீக் வரலாற்றில் 2வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. மும்பை நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நிகி பிரசாத் (25*) போராடியும் பலன் கிடைக்கவில்லை. ஏற்கெனவே, 2023ல் மும்பை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட கர்நாடக டிஜிபி

image

துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தையான கர்நாடக டிஜிபி (போலீஸ் வீட்டுவசதி கட்டுமானத் துறை) ராமசந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். தங்கக் கடத்தலுக்கு ராமசந்திர ராவுக்கு இருக்கும் செல்வாக்கை நடிகை ரன்யா ராவ் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில், ராமசந்திர ராவுக்கு எதிராக விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

News March 16, 2025

அடிபணிய மாட்டோம்: கர்ஜிக்கும் புதிய பிரதமர்

image

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி, அமெரிக்காவின் பகுதியாக கனடா ஒருபோதும் மாறாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். டிரம்ப்புடனான மோதல், வர்த்தக போர்ச் சூழல் என கனடாவின் இக்கட்டான காலகட்டத்தில் பதவியேற்றுள்ள கார்னி, நாட்டின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார். நிச்சயமற்ற பொருளாதார நிலை, விரைவில் தேர்தல் என்ற சூழலில், கார்னியின் தலைமைக்கு இது ஒரு சவால்.

error: Content is protected !!