News April 24, 2025
SAY NO TO PSL… அதிரடி நடவடிக்கை

IPL போல பாகிஸ்தானில் PSL நடைபெற்று வருகிறது. நடப்பு சீசன் PSL கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்தியாவில் ஃபேன்கோட் இணையதளத்தின் வழியாக PSL-ஐ இந்தியாவில் பார்க்கும் வசதி உள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் PSL ஒளிபரப்பப்படாது. செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
தலைகீழாக மாற்றம்… அடுத்தடுத்து ட்விஸ்ட்

பிஹாரில் 2020-ஐ ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் நிலை தலைகீழ் சரிவை கண்டுள்ளது. ஆரம்பத்தில் கடும்போட்டி நிலவிய நிலையில், 9 மணிக்கு மேல் NDA கூட்டணியின் முன்னிலை ஜெட் வேகத்தில் எகிறியது. தற்போது NDA கூட்டணி 196 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB கூட்டணி வெறும் 39 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதில் தனித்து BJP -89, JDU – 79 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
News November 14, 2025
நேருவின் பிறந்தநாளில் சறுக்கிய காங்கிரஸ்!

சுதந்திர இந்தியாவின் பெரும் அரசியல் ஆளுமையான இந்தியாவின் முதல் PM நேருவின் பிறந்தநாள் இன்று. ஆனால், அவரின் பெருமைகளை நினைவுகூரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இல்லை. இன்று வெளியாகி வரும் பிஹார் தேர்தல் முடிவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் MGB கூட்டணி 39 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது, காங்., 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. நேரு பிறந்தநாள், அவருடைய கட்சிக்கு சோக நாளாக மாறியுள்ளது!
News November 14, 2025
பிஹார் வெற்றி WB-லிலும் தொடரும்: கிரிராஜ் சிங்

பிஹாரில் NDA கூட்டணி 191 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகவுக்கே உரியது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வெற்றி, தற்போது அராஜக ஆட்சி நடைபெறும் மே.வங்கத்திலும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். CM மம்தா பானர்ஜி தலைமையிலான TMC ஆட்சி நடைபெறும் அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.


