News April 24, 2025
என் குடும்பத்தை தவறாக பேசினால்.. ARR-ன் அந்த மனசு!

கடவுளே ஆனாலும், பொது வாழ்வில் இருந்தால் அவரும் விமர்சிக்கப்படுவார் என ARR தெரிவித்துள்ளார். விவாகரத்திற்கு பிறகு, தனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக பேசினால், அவர்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்பேன், அவர்களை நல்வழிப்படுத்த பிரார்த்திப்பேன் எனவும் ARR தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தாய், சகோதரி, மனைவி இருப்பதால், மற்றவர்களைப் பற்றி அநாவசியமாக பேச வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 13, 2025
BREAKING: இபிஎஸ் உடன் மீண்டும் சேருகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் இபிஎஸ் உடன் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இணைவார் என்று பேச்சு அடிபட்ட நிலையில், அதிமுகவுக்கு திரும்பினால் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக EPS தரப்பு உறுதியளித்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் வைத்திலிங்கம், நலம் பெற்று திரும்பியதும் அதிமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.
News November 13, 2025
அதிக இன்ஸ்டா ஃபாலோயர்கள் இவங்களுக்கு தான்!

நவீன உலகில் இன்ஸ்டா கிராமத்தில் வாழ்பவர்கள் தான் அதிகம் எனலாம். அந்த இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்டவர்களின் டாப் 10 பட்டியலை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து, அந்த லிஸ்ட்டை பாருங்க. இந்த டாப் 10 லிஸ்ட்டில் ஒரு இந்தியரும் இல்லை. 16-வது இடத்தில் விராட் கோலி (274.65 மில்லியன்) உள்ளார். நீங்க இந்த லிஸ்ட்டில் இருப்பவர்களில் யார் யாரை ஃபாலோ பண்றீங்க?
News November 13, 2025
கிரிக்கெட் களத்திற்கு கம்பேக் கொடுக்கும் ஹர்திக்!

வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சையத் முஷ்டாக் அலி தொடரில் ஹர்திக் பாண்ட்யா பரோடா அணிக்காக விளையாடவுள்ளார். ஆசிய கோப்பை தொடரில், அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால், கிட்டத்தட்ட 2 மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். வரும் டிசம்பர் மாதம் தொடங்கும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான T20 தொடருக்கு முன்னோட்டமாக அவர் இத்தொடரில் விளையாட உள்ளார் என கூறப்படுகிறது.


