India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, மே மாதம் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. சுமார் 6 ஆண்டுக்கு பிறகு, இரு அணிகளும் மோதும் போட்டிகள், டப்ளினில் மே 10, 12 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, பாகிஸ்தானில் வரும் ஏப்ரலில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் விளையாட உள்ளது.

ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகனும், சின்ட்வாரா காங். வேட்பாளருமான நகுல் நாத்துக்கு ரூ.700 கோடி சொத்துக்கள் உள்ளன. அவரின் பிரமாண பத்திரத்தில், ரூ.649.51 கோடி அசையும் சொத்துக்கள், ரூ.48.07 கோடி அசையா சொத்துகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் மனைவிக்கு ரூ.716 கோடி சொத்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வருடாந்திர வருமானம் 185% மும், சொத்து ரூ.40 கோடியும் அதிகரித்துள்ளது.

நூறு சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் விதமாக ஏப்ரல் 19ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்.20,21 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு வருவதால் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்வோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.

பாஜக கூட்டணியின் 39 வேட்பாளர்களும் மக்களவைக்கு செல்வார்கள் என மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான எல்.முருகன் சூளுரைத்துள்ளார். நீலகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தமிழகத்தில் பாஜக பிரதான கட்சியாக வளர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். நீலகிரியில் அதிமுக எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறிய அவர், தமிழகம் முழுவதும் அதிமுக களத்தில் இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளதாகவும் கூறினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை அணி, 2 குழுக்களாக பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் தலைமையிலான அணியில், பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில் இஷான் கிஷன் உள்ளிட்டோரும் பிரிந்துள்ளனர். அத்துடன், பாண்டியாவுக்கு அணி உரிமையாளர்கள் ஆதரவாக உள்ளது, மும்பை அணிக்குள் கூடுதல் பிளவை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யும் நட்சத்திரங்களின் பட்டியலை திமுக சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள், போஸ் வெங்கட் , கருணாஸ், எழுத்தாளர் மதிமாறன், நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத், வாசுவிக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, கருணாஸ் தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கவரும் வகையில் பரப்புரை மேற்கொள்கிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஷேக்மேட் கேளிக்கை விடுதியின் மேற்கூரை நேற்று சரிந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் போலீசார், விடுதி மேலாளர் சதீஷை இன்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான விடுதியின் உரிமையாளர் அசோக்குமாரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிஏஏ சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி பல நாள்களாகி விட்டநிலையில், அதுகுறித்து ராகுல் காந்தி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “சிஏஏ சட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட ராகுல் தனது இந்திய நீதி யாத்திரையில் பேசவில்லை. சட்டம் அமலாகி பல நாள்களாகியும் அவர் வாய்திறக்கவில்லை. கார்கேவும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை” என்றார்.

விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிகுமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெய்பீம் படத்தின்போது சூர்யாவிற்கு எதிராக பாமகவும், ஆதரவாக விசிகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வலி நிவாரணிகள், தொற்று நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் சிறிய அளவில் உயர உள்ளது. முந்தைய ஆண்டுகளில் 10 -12% வரை விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இம்முறை விலை உயர்வு சதவீதம் சற்று குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, மொத்த விற்பனை விலை குறியீட்டிற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.