News March 29, 2024
BREAKING: விசிகவுக்கு ஆதரவு அளித்த நடிகர் சூர்யா குடும்பம்

விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிகுமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெய்பீம் படத்தின்போது சூர்யாவிற்கு எதிராக பாமகவும், ஆதரவாக விசிகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 20, 2026
அந்தரங்க வீடியோ… கர்நாடகா டிஜிபி அதிரடி சஸ்பென்ட்!

<<18899620>>ஆபாச வீடியோ<<>> வெளியானதை அடுத்து கர்நாடக DGP ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனது அலுவலகத்தில் பெண்களுடன் அவர் தகாத முறையில் நடந்துகொள்ளும் சிசிடிவி வீடியோ காட்சிகள் SM-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பொருத்தமற்ற முறையில் நடந்துகொண்டதுடன், அரசுக்கும் ராவ் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 20, 2026
புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை!

குடல் சிகிச்சைக்காக வழங்கப்படும் 3 மாத்திரைகள் தரமற்றவை என கருதி புதுச்சேரி அரசு தடை செய்துள்ளது. இமாச்சலில் தயாரிக்கப்பட்ட மாக்பான்சோ 40 மாத்திரை, கேரளாவின் பெபாவிட் பாராசிட்டமல் 650mg, ராஜஸ்தானின் சங்காவதி 5g ஆகிய மாத்திரைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை இனி விற்பனை செய்யக்கூடாது என்றும், இருப்பில் உள்ள மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
News January 20, 2026
கவர்னர் உரையே இனி இருக்காதா?

சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக கவர்னர் வெளியேறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை வாசிப்பு என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இது அமலுக்கு வர வலியுறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.


