News March 29, 2024
அதிமுக களத்திலேயே இல்லை

பாஜக கூட்டணியின் 39 வேட்பாளர்களும் மக்களவைக்கு செல்வார்கள் என மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான எல்.முருகன் சூளுரைத்துள்ளார். நீலகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தமிழகத்தில் பாஜக பிரதான கட்சியாக வளர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். நீலகிரியில் அதிமுக எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறிய அவர், தமிழகம் முழுவதும் அதிமுக களத்தில் இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளதாகவும் கூறினார்.
Similar News
News February 11, 2026
ஆட்சியில் பங்கில்லை என்பது CM கருத்து: செல்வப்பெருந்தகை

TN-க்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என CM சொன்னது அவருடைய கருத்து என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் CM கருத்துக்கு <<19109470>>மாணிக்கம் தாகூர்<<>> எதிர்வினை ஆற்றியதை பற்றி பேசிய அவர், கருத்து தெரிவித்தாலே கூட்டணியில் பிளவு என்று அர்த்தமா என கேட்டுள்ளார். மேலும், இது குறித்து திமுக தலைமையும், காங்., தலைமையும் ஆலோசித்து முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
கார்களின் விலை கணிசமாக குறைந்தது.. HAPPY NEWS

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், <<19104598>>ஹோண்டாவை<<>> தொடர்ந்து ரெனால்ட் தனது Kwid, Triber, Kiger மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எந்தெந்த மாடல் கார்களுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News February 11, 2026
ஆதரவாளர்கள் அதிருப்தி.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

தவெகவில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Ex MP சத்தியபாமாவுக்கு மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை அவரது ஆதரவாளர்கள் யாருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கவில்லை. இதனால், அவர்கள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக வெளியான தகவல் செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.


