India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

*ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’, வரும் ஜூன் மாதம்,
*சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’, வரும் ஆகஸ்ட் மாதம்,
*ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’, வரும் அக்டோபர் மாதம் என 3 பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். நீங்க எந்தப் படத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என கமெண்டில் சொல்லுங்க

▶ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோலி – 229
▶ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோலி – 215
▶கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக் – 210
▶ஷான் மார்ஷ், ஆடம் கில்கிறிஸ்ட் – 206
▶விராட் கோலி, கிறிஸ் கெயில் – 204*
▶டேவிட் வார்னர், நமன் ஓஜா – 189*
▶டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ – 185
▶கிறிஸ் லின், கௌதம் கம்பீர் – 184*
▶கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் – 183*
▶ருதுராஜ், டெவோன் கான்வே – 182

I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், மத்திய அரசு கேஸ் விலையை 10 ஆண்டுகளில் ₹800 உயர்த்திவிட்டு, ₹100 குறைத்துள்ளதாக சாடினார். I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் சமையல் எரிவாயு ₹500-க்கு வழங்கப்படும் என்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று நிகழும் முழு சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்கையில், சூரியன் முழுவதும் மறையும். இதனால் விழும் நிழலால், பூமியில் இருள் சூழும். இந்திய நேரப்படி இன்று இரவு 9.12 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை கிரகணம் நிகழவுள்ளது. இரவில் வருவதால், இந்தியாவில் கிரகணத்தை காண முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகல் என்பதால், அங்கு காண முடியும்.

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் பாஜக தேசியத் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ஸ்மிருதி இரானி, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். நாமக்கல், நாகை, தென்காசி தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

சப்த துர்க்கைகளில் ஈசனின் சூல அம்சமாக திகழும் சூலினி துர்க்கைக்கு உரிய பஞ்சமி திதியில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் மகிஷாசுரமர்த்தினி படத்திற்கு செவ்வரளி மாலை சாற்றி, 7 தீபங்களை வடக்கு திசையை நோக்கி ஏற்றி வைத்து, மிளகு வடை படைத்து, ஸ்ரீ சூலினி சக்ர விருத்த மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டால், பில்லி சூனிய மாந்திரீக ஏவல்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

தமிழகம் முழுவதும் இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் ஏப்.19 வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறை இ-ஃபைலிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கேற்ப எவ்வித கட்டமைப்பு வசதிகளையும் நீதிமன்றங்களில் செய்து தரவில்லை. இதனால், வழக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக கூறினர்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் நிரப்பப்படவுள்ள 9,144 Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Technician G – I (Signal) & G – III பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: ITI, Diploma & B.Sc., Degree. வயது வரம்பு: 18-36. தேர்வு: கணினி வழி தேர்வு. ஊதியம்: ₹19,900 – ₹29,200/-. கூடுதல் தகவல்களுக்கு <

யார் என்ன மொழி பேச வேண்டும் என ஆட்சியாளர்கள் முடிவு செய்ய முடியாது என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். இந்தியை படிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். எனக்கு இந்தி தெரியும், ஆனால், கட்டாயப்படுத்தி பேசுங்கள் என்பதை ஏற்க மாட்டேன் எனக் கூறினார். மொழி, உணவு, உடை, கல்வியை அடுத்தவர்கள் மீது திணிப்பது நல்ல ஜனநாயகம் இல்லை. அதை நம்மை ஆளுகிற செய்தாலும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை – கொல்கத்தா இடையேயான 22ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தோல்வியே பெறாத கொல்கத்தா உடன் மோதுவதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
Sorry, no posts matched your criteria.