News April 8, 2024

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இன்று முதல் போராட்டம்

image

தமிழகம் முழுவதும் இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் ஏப்.19 வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறை இ-ஃபைலிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கேற்ப எவ்வித கட்டமைப்பு வசதிகளையும் நீதிமன்றங்களில் செய்து தரவில்லை. இதனால், வழக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக கூறினர்.

Similar News

News December 9, 2025

சூழ்ச்சி செய்து எங்களை பிரித்தது ஜிகே மணி தான்!

image

பாமகவின் உள்கட்சி பிரச்னைகளுக்கு பாஜகவே காரணம் என திமுக கூறி வந்த நிலையில், குழப்பங்களுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி கூட்டத்தில் பேசிய அவர், தான் தலைவரான அடுத்த நாளில் இருந்தே ஜிகே மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டதாக விமர்சித்துள்ளார். சூழ்ச்சி செய்து அப்பா பிள்ளை உறவை பிரித்தது அவர் தான் எனவும் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News December 9, 2025

இனி போனில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாதா?

image

கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய ICC-யிடம் போட்ட டீலில் இருந்து Hotstar பின்வாங்க முடிவு செய்துள்ளது. 2024-ல் $3 பில்லியனுக்கு ஹாட்ஸ்டார் போட்ட இந்த டீல் 2027 தான் முடிவடைகிறது. ஆனால் கடுமையான நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி முன்னதாகவே ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அந்நிறுவனம் நினைக்கிறதாம். 2026 WC நெருங்குவதால், சோனி, அமேசான், நெட்பிளிக்ஸிடம் ICC பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

News December 9, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

image

2 நாள்களாக கனமழை இல்லாத நிலையில், இன்று நாகை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதோடு, தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

error: Content is protected !!