News April 8, 2024
தமிழ்நாட்டில் பாஜக தேசியத் தலைவர்கள்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் பாஜக தேசியத் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ஸ்மிருதி இரானி, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். நாமக்கல், நாகை, தென்காசி தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News December 14, 2025
பெரம்பலூர்: தேசிய நீதிமன்றத்தில் 563 வழக்குகள் தீர்வு

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் சார்பில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பத்மநாபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் இதில் மொத்தம் 563 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
News December 14, 2025
சளியை கரைக்கும் சிம்பிள் கஷாயம்

சளி வாட்டும்போது அதில் இருந்து வெளியேற, மாத்திரைகளை தேடிச் செல்வதே பலரின் வழக்கம். ஆனால் சிம்பிளான கஷாயம் மூலம் சளியை கரைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 கிளாஸ் தண்ணீரில், கிராம்பு -3, மிளகு -3, சுக்குப் பொடி – கால் ஸ்பூன், மஞ்சள் பொடி – 2 சிட்டிகை, பிளாக் சால்ட் – 2 சிட்டிகை, நா.சர்க்கரை – 1 ஸ்பூன் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடுங்கள். அதை 1 டம்ளராக சுண்ட வைத்தால் கஷாயம் ரெடி.
News December 14, 2025
மனம் கொத்திப் பறவையாக மாறிய அனுபமா பரமேஸ்வரன்

சமீபத்தில் வெளியான ‘பைசன்’ படத்தில் தனது தேர்ந்த நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனங்களில் அழுத்தமாக பதிந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில், தனது பார்வையாலேயே இதயங்களை கொள்ளை கொள்ளும் தேவதையாக வலம் வரும் அனுபமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளன. இளைஞர்களின் நெஞ்சங்களை கொத்தி செல்லும் அவரின் போட்டோஸை மேலே SWIPE செய்து கண்டு ரசியுங்கள்.


