India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

*குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் ‘CrPC 110’ என்பது ஒரு மினி குண்டாஸ் ஆகும். *குற்றப் பின்னணி கொண்டோரைத் தேர்தல் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது, வருவாய்க் கோட்டாட்சியர் சம்மன் அனுப்பி வரவழைத்து, சுய நன்னடத்தைக்கான சான்று பெறுவார். *ஓராண்டுக்கு இந்தச் சான்று உயிர்ப்புடன் இருக்கும். *குறிப்பிட்ட நபர் மீது ஏதேனும் ஒரு புகார் வந்தால்கூட அவர் கைது செய்யப்படுவார் (ஜாமின் அளிக்கப்படாது).

தொழில்நுட்பம், ராணுவ வலிமை & தேசிய அந்தஸ்து ஆகியவற்றில் இந்தியா பலவீனமாக இருந்ததால் அதன் ரூபாய் மதிப்பும் பலவீனமாக இருந்ததாக ஜோஹோ சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சுவிஸில் முடிதிருத்தும் தொழிலாளி சராசரியாக இந்திய ஆசிரியரின் வருமானத்தை விட 20-40 மடங்கு வருமானம் பெறுகிறார். இதே வருமானத்தை நமது ரூபாய் மதிப்பு உயரும்போது, நம் மக்களும் பெற முடியும்” என்றார்.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், அடுத்த சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அதனால், மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. காயம் குறித்து ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதால், அடுத்த ஒரு வாரத்திற்கு போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது உதவியை மோடி மறந்து விட்டதாக சரத்பவார் விமர்சித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அமைச்சராக தாம் இருந்தபோது, குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு உதவி செய்ததாகவும், ஆனால் அதை மறந்து தன்னை தனிப்பட்ட ரீதியில் மோடி தற்போது விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். மோடியை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவதாகவும், இது ஜனநாயகம் அல்ல சர்வாதிகாரம் என்றும் சரத்பவார் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, இன்று அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு இடைத்தேர்தல் ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கும் எனத் தெரிகிறது. அத்துடன், நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளதால், அதில் ஒரு நாள் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

உ.பி-யைச் சேர்ந்த சிறுமி நிகிதா (13) அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளை விரட்டிய சம்பவம் பேசும்பொருளாகியுள்ளது. குரங்குகளின் தாக்குதலில் இருந்து தன் தங்கையை பாதுகாக்க தைரியமாக அலெக்சாவில் நாய் குரைக்கும் ஓசையை எழுப்ப வைத்து, அவற்றை விரட்டியடித்துள்ளார். சிறுமியின் அறிவுக்கூர்மையைப் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா, “விரும்பினால் எதிர்காலத்தில் அவர் தனது நிறுவனத்தில் பணியில் சேரலாம்” என ஆஃபர் தந்துள்ளார்.

கவுதம் அதானியின் மனைவி பெயர் ப்ரித்தி அதானி. மும்பையில் 1965இல் பிறந்த அவர், அகமதாபாத் அரசு கல்லூரியில் பல் மருத்துவம் படித்துள்ளார். 1986இல் அதானியை திருமணம் செய்த அவர், 1996இல் அதானி அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சமூகசேவைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு ₹8,300 கோடி சொத்துகள் உள்ளன. கவுதம் அதானி, ப்ரித்தி தம்பதிக்கு, கரண், ஜீத் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

2019 இல் நடந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் மக்கள் ஆதரவால் தான் அதிமுக வென்றதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். இடைத் தேர்தலில் பாமகவின் துணையால் தான் அதிமுக ஆட்சியை தக்க வைத்தது என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இபிஎஸ், “2019 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்? காரணம் பாமகவுக்கு மக்கள் ஆதரவில்லை” எனக் கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ₹400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்கள் உட்பட 40 இடங்களுக்கு மேல் சோதனை நடைபெற்றது. இதில், ₹5 கோடி ரொக்கம், ₹5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

‘துருவ நட்சத்திரம்’ படம் தள்ளிப் போவது வருத்தம் அளிப்பதாக நடிகை ரித்து வர்மா வேதனை தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நாம் அனைவரும் இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம். நான் கௌதம் வாசுதேவ் மேனனின் தீவிர ரசிகை. அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது கனவாக இருந்தது. அவர் படத்தில் கதாநாயகியாக அதுவும் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பது ஒரு சிறந்த அனுபவம்” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.