News April 8, 2024

IPL: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவு

image

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், அடுத்த சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அதனால், மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. காயம் குறித்து ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதால், அடுத்த ஒரு வாரத்திற்கு போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

இன்று ஜோர்டான் புறப்படும் PM மோடி

image

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கான 4 நாள் பயணத்தை இன்று PM மோடி தொடங்குகிறார். இந்த பயணத்தில் இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளார். மோடியின் இந்தப் பயணம் மூலம் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 15, 2025

சற்றுமுன்: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

image

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று அமமுகவில் ஐக்கியமாக நிர்வாகிகள் பலர், அண்மைக் காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக அரியம்பாளையம் பேரூராட்சிச் செயலாளர் துரைசாமி மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார். அவருடன் அமமுக ஒன்றியச் செயலாளர் KC சண்முகம், வார்டு செயலாளர் கோபால் அசோகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

News December 15, 2025

மார்கழி மாதத்தில் செய்யக்கூடாத 3 காரியங்கள்!

image

மார்கழி மாதத்தில் சூரியனின் பலம், ஆற்றல் குறைந்து, குருவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். இதனால் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். முக்கியமாக புது வீடு குடிபுகுதல், வீடு கட்டும் பணிகள் தொடங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் புதிய தொழில்களும் தொடங்க கூடாதாம். மேலும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களையும் நடத்தக்கூடாதாம். Share it

error: Content is protected !!