news

News April 26, 2025

வருமா ‘வா வாத்தியார்’ ?

image

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்போது வெளிவரும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இன்னும் சில நாள் கார்த்தியின் கால்ஷீட் வேண்டும் என இயக்குநர் நலன் குமாரசாமி கேட்கிறாராம். ஆனால், சர்தார் 2-ல் பிஸியாக இருக்கும் கார்த்தி, இப்போது கால்ஷீட் தர முடியாது என அடம் பிடிக்கிறாராம். இருவரும் மாறி மாறி இழுத்தடிப்பதால், படம் எப்போது வெளிவரும் என்ற அறிகுறியே இல்லாமல் இருக்கிறது.

News April 26, 2025

பாகிஸ்தானுடன் இனி விளையாடக்கூடாது : கங்குலி

image

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா முற்றிலும் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய சவுரவ் கங்குலி, ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் கூட பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கங்குலி தெரிவித்தார். முன்னதாக, எந்தவொரு போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

News April 26, 2025

14 தீவிரவாதிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

image

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகள் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் J&K-ல் தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

News April 26, 2025

விஜய் கருத்தரங்கு இடத்தில் தீ விபத்து

image

கோவையில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து பிரதான சாலை வரை ரோட் ஷோ நடத்திய விஜய்-க்கு கட்சி நிர்வாகிகள் தாரை தப்பட்டை கிழிய வரவேற்பு கொடுத்தனர். பின்னர், அவர் கருத்தரங்கு மேடைக்கு சென்றார். அப்போது, திடீரென்று கருத்தரங்கு நடக்கும் இடம் அருகே திடீரென்று தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, உடனே அணைக்கப்பட்டது.

News April 26, 2025

நடிகர் நாகேந்திரன் காலமானார்

image

பிரபல இயக்குநர், நடிகர் நாகேந்திரன் காலமானார். இவர் சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில் 2015-ல் வெளிவந்த ‘காவல்’ படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமாகினார். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். நாகேந்திரனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.

News April 26, 2025

தமிழக மின்சாரத் தேவை உச்சம் தொட்டது

image

ஏசி, மின்விசிறி பயன்பாடு அதிகரித்திருப்பதால் இந்த கோடை காலத்தில் தமிழகத்தில் முதல்முறையாக மின்சாரத் தேவை உச்சம் தொட்டுள்ளது. கடந்த மே 2-ம் தேதி மின்சாரத் தேவை 20,830 மெகா வாட்டாக வரலாற்று உச்சம் தொட்டது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை 20,148 மெகா வாட்டாக உச்சம் தொட்டுள்ளது. சென்னையின் தேவையும் 3,899 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

News April 26, 2025

முதல்வருக்கு முத்தம் கொடுக்க ஆசை

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். 4 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகள் செய்திருக்கும் அவர், அகில இந்திய அளவில் கொண்டாடப்படுகிறார் என்றும் துரைமுருகன் பாராட்டினார். தான் வளர்த்த பிள்ளை என்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து துரைமுருகன் உணர்ச்சி பொங்க பேசினார்.

News April 26, 2025

இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம்!

image

ஆண்ட்ராய்டு யுகத்தில், காலை முதல் மாலை வரை எல்லாமே ஸ்மார்ட் போன்தான். ஆனால், பலரும் தங்களுக்கு தெரியாமலேயே போனுக்கு அடிமையாகி இருக்கின்றனர். போனை கொஞ்ச நேரம் வேறு எங்காவது வைத்து விட்டால் பயம், பதற்றம், டென்ஷன் போன்றவை ஏற்பட்டு தடுமாறுவார்கள். இதன் பெயர்தான் Nomophobia. அதாவது, No-mobile-phobia. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு மத்தியிலேயே இருப்பார்கள். நீங்க எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்றீங்க?

News April 26, 2025

எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்ணீங்க என தெரியணுமா?

image

டெய்லி பலமணி நேரம் போன்களுடனே இருக்கிறோம். ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் போன் யூஸ் பண்றோம்? எந்த ஆப்பை அதிகமாக யூஸ் பண்றோம் என்பதை ஈசியா போனிலேயே தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களில் settings-> Digital Wellbeing option சென்று பாருங்கள். உங்களை பற்றி தெரிந்து கொள்வீர்கள். ஐபோன்களில் Screen Time app and the Attentive app என்ற பெயரில் இருக்கிறது. நேரத்தை எவ்வளவு வீணாக்குகிறோம் என புரியும்!!

News April 26, 2025

ராகு – கேது பெயர்ச்சி நிறைவு

image

வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி இன்று மாலை 4.28 மணிக்கு ராகு – கேது பெயர்ச்சி நடைபெற்றது. 18 மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெயரும் ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்திருப்பதாக திருநாகேஸ்வரம் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல, கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.

error: Content is protected !!