India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நான்கரை ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அவர் தெலங்கானா ஆளுநராக தேர்வு செய்யப்பட்ட பின் பாஜகவில் இருந்து விலகினார். நேற்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சற்றுமுன் கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் உறுப்பினராக இணைந்துள்ளார். அவர் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இளையராஜா முதன்முறையாக சென்னைக்கு வருவதை உணர்த்தும் வகையில் போஸ்டர் உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி செய்ய இந்த பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட சுதீஷ் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் தொடுத்த வழக்கு குறித்து பதிலளிக்கக்கோரி, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை 9 சம்மன்கள் அனுப்பியதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ED-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஏப்.22க்கு ஒத்திவைத்தது.
ஏப்ரல் 1 முதல் இ-ஸ்கூட்டர்களின் விலை 10% வரை உயரும் என்று கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான ICRA தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம், எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்புத் திட்டம்-2024இன் காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இத்திட்டத்தின் கீழ் பைக்குகளுக்கு ரூ.5,000 – ரூ.10,000 வரை மானியம் வழங்கப்பட்டுவருகிறது. தற்போது இந்த காலக்கெடு முடிவடைவதால் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தும் எனத் தெரிகிறது.
தஞ்சையில் 6 முறை எம்.பியாக இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு பதிலாக முரசொலி, கள்ளக்குறிச்சியில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு பதிலாக மலையரசன், தருமபுரியில் செந்தில்குமாருக்கு பதில் மணி, சேலத்தில் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு பதில் செல்வ கணபதி, பொள்ளாச்சியில் சண்முக சுந்தரத்திற்கு பதிலாக ஈஸ்வர சாமி, தென்காசியில் தனுஷ் எம்.குமாருக்கு பதிலாக ராணிஸ்ரீகுமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
CSK அணியின் கேப்டன் தோனி குறித்து ரவீந்திர ஜடேஜா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், “2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி இரு பந்துகளில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தேன். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தோனி, என்னை கட்டி தழுவினார். அந்த தழுவலை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். லவ் யூ தல” எனக் கூறியுள்ளார்.
சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. 2005இல் முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராய நீதியரசர் ராஜீந்தர் சச்சார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கள ஆய்வு செய்த இந்தக் குழு 403 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. வெளி நாடுகளில் இருப்பது போன்ற ‘சம வாய்ப்பு ஆணையம்’ உருவாக்க வேண்டும் என்பன போன்ற 70 விஷயங்களைக் குழு பரிந்துரைத்திருந்தது
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயபிரபாகரன் விருப்ப மனு அளித்துள்ளார். திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. பாஜக சார்பில் அங்கு ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் விஐபி-க்ககள் மோதும் தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.
மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தலையொட்டி, தமிழக காவல்துறை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 28ஏ-வின்கீழ், டிஜிபி, காவல் ஆணையர்கள் உள்பட அனைத்து காவல்துறையினரும் தேர்தல் முடிவு வெளியாகும் வரை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.