News March 20, 2024

கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

image

அரவிந்த் கெஜ்ரிவால் தொடுத்த வழக்கு குறித்து பதிலளிக்கக்கோரி, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை 9 சம்மன்கள் அனுப்பியதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ED-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஏப்.22க்கு ஒத்திவைத்தது.

Similar News

News February 7, 2026

காங்கிரஸ் வேண்டாம்.. விஜய்க்கு சீமானின் அட்வைஸ்

image

காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று தான் முன்பு நேரில் சந்தித்தபோது விஜய்யிடம் கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸை சேர்த்துக்கொள்ளலாமா என விஜய் கேட்டபோது, அவர்களை வைத்துக்கொண்டு எந்த அரசியலை பேச முடியும் என தான் கேள்வியெழுப்பிதாக சீமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு விவகாரம், GST, நீட் என எல்லாவற்றையும் புகுத்தியதே காங்கிரஸ்தான் என விஜய்யிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News February 7, 2026

Starlink killer.. சீனாவின் புது ஆயுதம்

image

சீனா தரையிலிருந்து செயற்கைக்கோள்களை செயலிழக்க செய்யும் மைக்ரோவேவ் அமைப்பை உருவாக்கியுள்ளது. எலான் மஸ்க்கின் Starlink செயற்கைக்கோள்கள் சீனாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், அதை செயலிழக்க செய்ய Starlink killer-ஐ உருவாக்கியுள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. ஜிகாவாட் அளவில் சக்தியை உருவாக்கும் இந்த மைக்ரோவேவ், செயற்கைக்கோள்களை குறிவைத்து செயலிழக்க செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2026

திருமணத்திற்கு முன் நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர்

image

பாலிவுட் நடிகை நேஹா துபியா, 2018-ம் ஆண்டு நடிகர் அங்கத் பேடியை மணந்தார். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த நேஹா, அடுத்த 7 மாதத்தில் குழந்தையை பெற்றெடுத்தார். இது அப்போது பேசுபொருளானது. தற்போது அவர் ‘நோ ஃபில்டர் நேஹா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில், பங்கேற்ற கணவர் அங்கத் பேடி, தான் 75 பெண்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

error: Content is protected !!