news

News April 11, 2024

தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்காதீர்கள்

image

மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி சாப்பிடுவது மிகவும் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் வைட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்போர்ட். அதே போல பப்பாளிப் பழம் சாப்பிடுவது கண் பார்வைக்கு மிக நல்லது.

News April 11, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
➤ எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
➤ எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
➤ எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
➤ ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

News April 11, 2024

ஓபிஎஸ், தினகரன் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

image

தேர்தலுக்கு பின் அதிமுகவில் மாற்றம் வரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனியில் போட்டியிடும் தினகரன் 50% வாக்குகளை பெற்று வெல்வார் என்ற அவர், ஓபிஎஸ் வெற்றி முடிவு செய்யப்பட்ட ஒன்று எனத் தெரிவித்தார். சுயேச்சையாக போட்டியிட்டு ஓபிஎஸ் வெற்றி பெற்ற பின்பு தென் மாவட்ட மக்கள் அவர் பின்னால் அணி திரளுவார்கள். தேர்தல் முடிவில் நிச்சயம் இதை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News April 11, 2024

வரலாற்றில் இன்று

image

➤1829 – கொழும்பு, புறக்கோட்டை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது
➤1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.
➤1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
➤1909 – டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.
➤1970 – அப்பல்லோ 13 விண்கலம் ஏவப்பட்டது.
➤2012 – இந்தோனேசியாவில் சுமத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

News April 11, 2024

தோற்றாலும் கெத்து காட்டும் ராஜஸ்தான் அணி

image

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக நேற்றை ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று அசைக்க முடியாத அணியாக இருந்த ராஜஸ்தான், தனது முதல் தோல்வியை இந்த தொடரில் பெற்றுள்ளது. ஆனாலும், அந்த அணி 8 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

News April 11, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
◾விளக்கம்: நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

News April 11, 2024

வயதானவர்கள் வீட்டில் இருக்கிறார்களா?

image

வயதானவர்கள் தடுமாறி விழுந்தால் எலும்புகள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். எனவே அவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது, வெளிச்சம் இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும். கால் தடுமாறி பிசகிவிட்டால் நீவிவிடுவதை தவிர்க்க வேண்டும். எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால் கூட நீவிவிடுவதன் மூலம் அது அதிகமாகும்.

News April 11, 2024

ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்

image

பிரதமர்களை உருவாக்கும் இயக்கம் திமுக என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசில் பங்கெடுத்து திமுக என்னென்ன சாதனைகளை செய்துள்ளது என்று பலமுறை மக்களிடம் எடுத்து கூறியுள்ளதாக தெரிவித்த அவர், அதிமுக மத்திய அரசியல் அங்கம் வகித்த போதெல்லாம், திமுக ஆட்சியை கலைக்க வேண்டும், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று மட்டுமே ஆட்சியாளர்களிடம் அவர்கள் கோரிக்கை வைத்ததாகவும் விமர்சித்தார்.

News April 11, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News April 11, 2024

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நமீதா

image

பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்ற வந்த நடிகை நமீதாவை போலீஸார் விவிஐபி கேட் வழியாக அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு கணவருடன் வந்த அவரை போலீசார் பொதுமக்கள் செல்லும் வழியில் போக அறிவுறுத்தினர். இதனால் சில நிமிடங்கள் போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் விவிஐபி கேட் வழியாக உள்ளே சென்றார்.

error: Content is protected !!