News April 11, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
◾விளக்கம்: நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

Similar News

News November 13, 2025

7 ரூபாய் மட்டுமே.. தினமும் 2GB ரீசார்ஜ் ஆஃபர்

image

தினமும் ₹7 என்ற கணக்கில், ₹350 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 50 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால்ஸ் ஆகியவற்றை பெறலாம். இதுமட்டுமின்றி BiTV சேவை இலவசமாக வழங்கப்படுவதால் 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், பிரபலமான ஸ்ட்ரீமிங் ஆப்ஸை பார்த்து மகிழலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு BSNL இணையதளத்தை அணுகவும். SHARE IT

News November 13, 2025

ஷமி ஏன் அணியில் இல்லை? கேப்டன் சுப்மன் கில் பதில்!

image

ஷமி ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியுள்ளார். தற்போது அணியில் உள்ள பவுலர்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், வருங்காலத்தில் ஷமி அணியில் இடம் பெறுவாரா என்பதற்கு அணி தேர்வாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.

News November 13, 2025

எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல: ஒமர் அப்துல்லா

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ச்சியாக கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களாக உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் வாழும் அனைத்தும் முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்று அம்மாநில CM ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், நாட்டின் அமைதியை குலைப்பதற்கென சிலர் உள்ளதாக குறிப்பிட்டார்.

error: Content is protected !!