India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், வடசென்னை, தென்சென்னை, கோவை, நீலகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
▶மார்ச் 20 ▶பங்குனி – 7 ▶கிழமை: புதன் ▶ திதி: ஏகாதசி ▶நல்ல நேரம்: காலை 09.30 – 10.30, மாலை 04.30 – 05.30 ▶கெளரி நேரம்: காலை 10.30 – 11.30, மாலை 06.30 – 07.30 ▶ராகு காலம்: மதியம் 12.00 – 01.30 ▶எமகண்டம்: காலை 07.30 – 09.00 ▶குளிகை: காலை 10.30 – 12.00 ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
கொத்தமல்லியை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வது நல்லது. மூளை செயல்திறன், கண் பார்வை , மேம்படுத்துவதுடன், செரிமானக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறலாம். சித்த மருத்துவத்தில் ‘பச்சை வைரம்’ என்று கொத்தமல்லி அழைக்கப்படுகிறது. காலையில் கைப்பிடி அளவு கொத்தமல்லிக் கீரையுடன் ஒரு மாதுளம் பழம், ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஜூஸ் செய்து பருகினால் ரத்தம் சுத்தமாகும்.
தமிழகத்தில் 7 தனித்தொகுதிகள் உள்பட 39 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.25,000 செலுத்த வேண்டும். இதே போன்று, தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.12,500 செலுத்த வேண்டும். தேர்தலில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறினால் வேட்பாளர் டெபாசிட் இழப்பர்.
ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க ரஃபா நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது அவசியமென பைடனிடம் தெளிவுப்படுத்தி விட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். எகிப்து எல்லையை ஒட்டிய ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு, அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லையென நெதன்யாகு கைவிரித்துள்ளார்.
பூமியில் இருந்து 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Whirlpool கேலக்ஸியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் நாசா, இரவு வானில் உள்ள பிரகாசமான சுழலும் Whirlpool கேலக்ஸி, அதன் பிரமாண்ட கம்பீரத்தை காட்டும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் பெறப்படும். 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 30ஆம் தேதி மனுக்களை பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
திருவனந்தபுரத்தில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் பேசிய அவர், ‘கடந்த 2 தேர்தல்களில் பாஜக இரண்டாமிடம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் ஒற்றுமை இல்லையென பாடமெடுக்கும் கம்யூனிஸ்டுகள், தற்போது எனக்கு எதிராக செய்யும் பிரச்சாரம் பாஜகவுக்கு உதவியாக போய் முடியும்’ என்றார்.
➤1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது. ➤1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கான்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. ➤1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். ➤ 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது ➤1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது. ➤2003 – ஈராக் மீது அமெரிக்கக் கூட்டு படைகள் ராணுவ நடவடிக்கையை தொடங்கின.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனையை நிறுத்த கனடா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலோனி ஜோலி தெரிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து, கனடா நாடாளுமன்றத்தில் ஆயுதங்கள் விற்பனைக்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.