News April 10, 2024
பாபா ராம்தேவுக்கு மீண்டும் சிக்கல்

பதஞ்சலி விளம்பரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாபா ராம்தேவின் மன்னிப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் ஏற்க மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ், ஆச்சார்ய பாலகிருஷ்ணா இன்று ஆஜராகினர். அப்போது 2 பேரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகத் கூறப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், வேண்டுமென்று அவமதித்ததாக எடுத்து கொள்ளப்படுமென கூறினர். இதனால் ராம்தேவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
புதுச்சேரியில் விஜய்யின் கூட்டணி வியூகம்!

அரசியல் தலைவராக புதுவைக்கு முதல் விசிட் அடித்த விஜய், பொதுக்கூட்டத்தில் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால், அங்கு ஆட்சியில் உள்ள NR காங்கிரஸ், CM ரங்கசாமி பற்றி விமர்சனம் ஏதும் வைக்கவில்லை. மாறாக கூட்டத்திற்கு நல்ல பாதுகாப்பு அளித்த CM-க்கு நன்றி என்றார். நீண்ட காலமாக ரங்கசாமியுடன் நெருக்கமாக இருக்கும் விஜய், 2026-ல் அவருடன் கூட்டணி வைக்க வியூகம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 9, 2025
பெண்களுக்கு இலவச தையல் மெஷின்: அரசின் சூப்பர் திட்டம்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் TN அரசு பெண்களுக்கு இலவசமாக தையல் மெஷின்களை வழங்குகிறது. இதனை பெற விரும்பும் பெண்கள் 6 மாதம் தையல் பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹72,000-க்கு மிகாமலும், வயது 40-ஐ தாண்டாமலும் இருக்க வேண்டும். முழு தகவல்களை அறிய www.tnsocialwelfare.tn.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். SHARE.
News December 9, 2025
தமிழ் சினிமா பிரபலத்தின் மனைவி காலமானார்

மறைந்த பிரபல கவிஞர் புலமைப் பித்தனின் மனைவி தமிழரசி (83) காலமானார். ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ‘நான் யார் நீ யார்’ பாடல் எழுதியதன் மூலம் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராக மாறிய புலமைப் பித்தன், சட்டப்பேரவை கவிஞராகவும் இருந்தவர். அதிமுகவின் நீண்ட நாள் உறுப்பினரான கவிஞரின் மனைவி தமிழரசி உயிரிழந்த செய்தியை கேட்டு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


