News April 10, 2024
தாத்தாவுக்கு பாகுபலி விருந்து கொடுத்த பேரன்கள்

ஆந்திராவில் புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் பாகுபலி விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், யுகாதி பண்டிகையொட்டி பட்டயக்குடம் பகுதியில் உள்ள நாக சூர்யா என்ற முதியவரின் வீட்டிற்கு சென்ற அவரது பேரன்கள், அவருக்கு ரொட்டிகள், இனிப்பு, பழங்கள், பொங்கல் என பாகுபலி விருந்து கொடுத்து அசத்தியுள்ளனர். இவற்றை ருசி பார்த்த அவர், மனம் நெகிழ்ந்து போனார்.
Similar News
News December 6, 2025
அகண்டா 2 ரிலீஸ் ஆகாததற்கு இதுதான் காரணமா?

பாலையா ஃபேன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்த அகண்டா 2 வெளியாகவில்லை. இப்படத்தை தயாரித்த 14 ரீல்ஸ் நிறுவனம், முந்தைய பட தயாரிப்புகள் காரணமாக ஈரோஸ் நிறுவனத்துக்கு ₹28 கோடி செலுத்த வேண்டும் என பேசப்படுகிறது. இதை கொடுக்காததால் படத்தை தடைசெய்யக்கோரி ஈரோஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னையை தீர்த்து வருவதாக 14 ரீல்ஸ் கூறியதால், படம் டிச.20-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 6, 2025
முருகரும் ராமரும் எங்கள் பக்கம் தான்: RS பாரதி

பார்லிமெண்ட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் மீதான விவாதத்தில் எல்.முருகன், தமிழக அரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில், முருகன் என்று பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் முருகன் ஆகிவிட முடியாது என RS பாரதி விமர்சித்துள்ளார். மேலும் அறுபடை வீடுகள் உள்ள தொகுதிகளில் எல்லாம் திமுக தான் வெற்றி பெற்றது என்ற அவர், முருகனும் எங்கள் பக்கம் தான், ராமரும் எங்கள் பக்கம் தான் என கூறினார்.
News December 6, 2025
திடீர் கோடீஸ்வரர் அண்ணாமலை? சாடும் CPM

கர்நாடகா, TN-ல் பல ஏக்கர் நிலங்களை அண்ணாமலை வாங்கி குவித்துள்ளதாக CPM மாநில செயலர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டிள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, 246 ஆடம்பர மாளிகைகளை விற்பதற்காக காட்டுவதாகும், அவற்றின் மதிப்பு தலா ₹9 கோடி என்றும் தெரிவித்துள்ளார். இப்படி திடீர் கோடீஸ்வரரான ரகசியத்தை அவர் விளக்கி, தான் ஒரு கிளீன் மேன் என்பதை நிரூபிக்க வேண்டும் என பெ.சண்முகம் கூறியுள்ளார்.


