India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் ஷோபா, ‘என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முந்தைய கருத்தையும் திரும்ப பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
➤தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. ➤ பெங்களூரு குண்டுவெடிப்பை தமிழர்களுடன் தொடர்புபடுத்தி பேசியதற்காக மன்னிப்பு கோரினார் ஷோபா கரந்த்லாஜே ➤ திமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் வெளியிடுகிறார் ➤ கிரிக்கெட்டில் சச்சினை விட கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து புகழாரம்
மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டன. வேட்புமனு இன்று தொடங்கும் நிலையில், அதிமுக மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னும் நிறைவு செய்யவில்லை. நேற்று பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், தேமுதிகவை எப்படியாவது தக்கவைக்க அதிமுக விரும்புகிறது. இன்று அல்லது நாளைக்குள் அதிமுக கூட்டணி நிலைப்பாட்டோடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கையையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.
அடிக்கடி தவறு செய்யுங்கள். ஆனால் செய்த தவறையே அடிக்கடி செய்ய கூடாதென இளம் தொழில்முனைவோருக்கு OYO சி.இ.ஓ ரிதேஷ் அகர்வால் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், ‘எந்த பின்புலமும் இல்லாமல் தொழில் தொடங்கிய எனது அனுபவத்திலிருந்து இளம் தொழில்முனைவோர் விரைவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டார்ட் அப் சமூகத்திற்கு மேலும் பலவற்றைக் கொடுப்பதில் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், வடசென்னை, தென்சென்னை, கோவை, நீலகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
▶மார்ச் 20 ▶பங்குனி – 7 ▶கிழமை: புதன் ▶ திதி: ஏகாதசி ▶நல்ல நேரம்: காலை 09.30 – 10.30, மாலை 04.30 – 05.30 ▶கெளரி நேரம்: காலை 10.30 – 11.30, மாலை 06.30 – 07.30 ▶ராகு காலம்: மதியம் 12.00 – 01.30 ▶எமகண்டம்: காலை 07.30 – 09.00 ▶குளிகை: காலை 10.30 – 12.00 ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
கொத்தமல்லியை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வது நல்லது. மூளை செயல்திறன், கண் பார்வை , மேம்படுத்துவதுடன், செரிமானக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறலாம். சித்த மருத்துவத்தில் ‘பச்சை வைரம்’ என்று கொத்தமல்லி அழைக்கப்படுகிறது. காலையில் கைப்பிடி அளவு கொத்தமல்லிக் கீரையுடன் ஒரு மாதுளம் பழம், ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஜூஸ் செய்து பருகினால் ரத்தம் சுத்தமாகும்.
தமிழகத்தில் 7 தனித்தொகுதிகள் உள்பட 39 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.25,000 செலுத்த வேண்டும். இதே போன்று, தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.12,500 செலுத்த வேண்டும். தேர்தலில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறினால் வேட்பாளர் டெபாசிட் இழப்பர்.
ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க ரஃபா நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது அவசியமென பைடனிடம் தெளிவுப்படுத்தி விட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். எகிப்து எல்லையை ஒட்டிய ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு, அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லையென நெதன்யாகு கைவிரித்துள்ளார்.
பூமியில் இருந்து 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Whirlpool கேலக்ஸியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் நாசா, இரவு வானில் உள்ள பிரகாசமான சுழலும் Whirlpool கேலக்ஸி, அதன் பிரமாண்ட கம்பீரத்தை காட்டும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.