India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாமக, பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் முதல் முறையாக மனந்திறந்து பேசியுள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர், “அதிமுக எப்போதும் சொந்தக் காலில் நிற்கும் கட்சி. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வருவதும் வராமலிருப்பது அவரவர் விருப்பம். அது அவர்களின் முடிவு. பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது ஏமாற்றத்தை அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அதிமுக மூத்த தலைவர்களான செல்வகணபதி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனும், 1991-96 காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதியும் தேனி & சேலம் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இருவருக்கும் அவரவர் தொகுதியில் தனி செல்வாக்குள்ளது.
கடந்த வாரங்களில் தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது விலை மளமளவென உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், இன்று ₹40 உயர்ந்து ₹49,120க்கும், கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹6,140க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ₹80.00க்கும் கிலோ ₹80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ் மொழிக்கு மீண்டும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. எனினும் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்கப்படவில்லை. இதை மனதில் வைத்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில், “ஒன்றிய ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்றாக்கப்படும். ஒன்றிய அரசு தேர்வுகளை தமிழிலும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
சேதுசமுத்திரத் திட்டத்தை திமுக மீண்டும் முன்வைத்துள்ளது. தென்னிந்தியா, இலங்கை இடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில், முன்பு சேதுசமுத்திர திட்டம் துவங்கப்பட்டது. ஆனால் இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் 2005ல் கைவிடப்பட்டது. இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில், “சேதுசமுத்திரத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மத்தியில் அமையும் புதிய ஆட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து ஏ.சி.சண்முகம் களம் இறங்க உள்ளார். தாமரை சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் இங்கு திமுக – பாஜக நேரடியாக மோதுகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், சென்னையை விட தூத்துக்குடி மாவட்டத்துக்கு அதிக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி கனிமொழி போட்டியிடுகிறார். இதை வைத்து, தூத்துக்குடிக்கு 8 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் திமுக அளித்துள்ளது. சென்னைக்கு 7 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையில் திமுக அளித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்காக தேமுதிக அலுவலகத்தில் விஜய பிரபாகரன் விருப்ப மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை முதல் நெல்லை, கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. பின்னர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு, அது நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.