news

News March 21, 2024

குஜராத் அணியில் ஷமிக்கு பதிலாக சேர்ந்த சந்தீப் வாரியர்!

image

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷமிக்கு பதிலாக தமிழக அணி வீரர் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்குகிறது. கணுக்கால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருக்கும் ஷமி, ஐ.பி.எல் தொடரிலிருந்தும் விலகினார். இதனையடுத்து அவருக்குப் பதிலாக சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர், ரஞ்சிக் கோப்பை தொடரில் தமிழக அணிக்கு விளையாடினார்.

News March 21, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மார்ச் 21 ▶பங்குனி – 8 ▶கிழமை: வியாழன் ▶ திதி: துவாதசி ▶நல்ல நேரம்: காலை 10.30 – 11.30 ▶கெளரி நேரம்: காலை 12.30 – 01.30, மாலை 06.30 – 07.30 ▶ராகு காலம்: மதியம் 01.30 – 03.00 ▶எமகண்டம்: காலை 06.00 – 07.30 ▶குளிகை: காலை 9.00 – 10.30 ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

News March 21, 2024

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?

image

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு ஐகோர்ட் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் எம்.எல்.ஏவான பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குமாறு முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க, ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

News March 21, 2024

அயோத்தியில் குடும்பத்துடன் பிரியங்கா சோப்ரா தரிசனம்

image

அயோத்தி ராமர் கோயிலுக்குத் தனது கணவர், குழந்தையுடன் சென்ற பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம் செய்தார். கடந்த 2018இல் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்காவுக்கு, மால்டி என்ற பெண் குழந்தை உள்ளது. அமெரிக்காவில் செட்டிலாகி விட்டாலும், பாரம்பரியத்தை மறக்காமல் பிரியங்கா மஞ்சள் நிற சேலை, நிக் ஜோனஸ் வெள்ளை குர்தா அணிந்தும், தங்கள் குழந்தையுடன் சென்று ராமரை வழிபட்டனர்.

News March 21, 2024

நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்

image

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை துவங்கும் ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார். முதல்வர் பிரச்சாரத்துக்கு குறித்த காலத்திற்கு செல்ல வேண்டுமென்பதால், வழியில் வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய கூடாதென திமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

அருணாச்சலில் திடீர் நிலநடுக்கம்

image

அருணாச்சலில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 ஆக பதிவானது. நள்ளிரவு 1.49 மணியளவில் மேற்கு கெமெங் பகுதியை மையமாக கொண்டு 10 கி.மீ ஆழத்தில் பதிவான ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில வினாடிகள் அதிர்வை உணர்ந்த மக்கள், உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. கடந்த மாதம் இதேபோன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 21, 2024

வரலாற்றில் இன்று!

image

➤1844 – பஹாய் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. ➤1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள், கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது ➤1945 – பிரிட்டன் விமானங்கள் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர். ➤1990 – 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது. ➤2006 – டிவிட்டர் (தற்போது எக்ஸ்) சமூக ஊடகம் தொடங்கப்பட்டது.

News March 21, 2024

சம்பளத்தை விட்டு கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்!

image

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தொடரும் சூழலில், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளனர். அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தான் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அரசு முறைப்பயணமாக வெளிநாடு செல்ல, அரசின் முன் அனுமதி பெறுவது அங்கு கட்டாயமாக உள்ளது.

News March 21, 2024

டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடம்

image

ஐ.சி.சி., வெளியிட்டுள்ள ஆடவர் கிரிக்கெட் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 861புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2ஆவது இடத்தில் பில் சால்ட், 3ஆவது இடத்தில் முகமது ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சாளர் தரவரிசையில், அடில் ரஷீத் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அக்‌ஷர் படேல் 4ஆவது இடத்திலும், ரவி பிஷ்னோய், மகேஷ் தீக்‌ஷனா 5ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

News March 21, 2024

இவரை நிறுத்தினால் பாஜக டெபாசிட் வாங்காது

image

திருச்சியில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராமஸ்ரீனிவாசனை வேட்பாளராகக் களமிறங்கினால் பாஜக டெபாசிட் இழக்குமென பாஜக பிரமுகர் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில், திருச்சிக்கு அறிமுகமில்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ராமஸ்ரீனிவாசனை இறக்கினால், வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை இறக்கினால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

error: Content is protected !!